மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்கூலுக்கு வாங்க.. மகாராஷ்டிராவில் 4 நாட்களில் திறக்கப்படும் பள்ளிகள்.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க ஜனவரி 24ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 24ம் தேதி முதல் அங்கு 1-12 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் செயல்படும். கொரோனா கேஸ்கள் லேசாக சரிந்த நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம் என்று மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்பட்டு பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நிதி உதவி கொடுப்பதற்காக விளையாட்டு சங்கங்களில் நிர்வாகியாக நியமிக்காதீங்க... சென்னை ஹைகோர்ட் உத்தரவு நிதி உதவி கொடுப்பதற்காக விளையாட்டு சங்கங்களில் நிர்வாகியாக நியமிக்காதீங்க... சென்னை ஹைகோர்ட் உத்தரவு

 பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

முன்னதாக கொரோனா கேஸ்கள் உயர்ந்த காரணத்தால் மும்பையிலும் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களிலும் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு திடீரென கொரோனா கேஸ்கள் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மொத்தமாக மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்கள் இப்போதும் 40 ஆயிரத்திற்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. நேற்று மகாராஷ்டிராவில் 43,697 கேஸ்கள் பதிவானது. கடந்த வாரமும் அங்கு இதே அளவு கேஸ்கள்தான் பதிவானது.

மகாராஷ்டிரா கொரோனா

மகாராஷ்டிரா கொரோனா

மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்கள் பெரிதாக குறையவில்லை என்றாலும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கொடுத்த பரிந்துரைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அங்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 2,64,708 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இன்னொரு பக்கம் மும்பையில் தினசரி கேஸ்கள் வேகமாக குறைந்துள்ளது. மும்பையில் தினசரி கேஸ்கள் 20 ஆயிரம் என்ற அளவில் கடந்த 10 நாட்களுக்கு முன் பதிவானது.

தினசரி கேஸ்கள்

தினசரி கேஸ்கள்

கடந்த 2-3 நாட்களாக தினசரி கேஸ்கள் 6 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. நேற்று மும்பையில் 6032 கேஸ்கள் பதிவானது. அங்கு 31,856 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்த நிலையில்தான் மும்பை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் அவ்வளவு தீவிரமாக இல்லாத காரணத்தால் இதே அறிவிப்பை வரும் நாட்களில் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுபோல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

கொரோனா பரவல் காரணமாக 1- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு போல தமிழ்நாட்டிலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் தினசரி கேஸ்களும், ஆக்டிவ் கேஸ்களும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra to open schools for all from January 24 including in Mumbai amid surge in Coronavirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X