கொரோனாவால் ஆண்களின் குழந்தை பேறு திறன் குறைவு... ஆய்வில் ‛திடுக்’ தகவல்
மும்பை: லேசான மற்றும் மிதமான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு குழந்தை பேறு திறன் குறைந்துள்ளது என்று திடுக்கிடும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது கொரேனாா பரவல் குறைந்து, பாதிப்பும் சரிந்துள்ளது. முந்தைய 2 ஆண்டுகளில் 3 அலைகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து பொதுமக்களை அச்சுறுத்தியது.
தற்போது வரை நாடு முழுவதும் பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கானவர்களை கொரோனா கொன்றுள்ளது. கொரேனாாவால் பாதிக்கப்பட்டு மீண்டாலும் சிலர் முன்பு போல் செயல்பட முடியவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

திசுக்கள் மீது தாக்குதல்
இதற்கு கொரோனா பாதிப்பை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ் சுவாச உறுப்புகளை தாக்கினாலும், அதன் பாதிப்பும் உடலின் பிற பாகங்களையும், திசுக்களையும் தாக்கும் என கூறப்படுகிறது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டாலும் கூட பல முதியவர்களுக்கு இன்னும் உடல்வலி, சோர்வு இருந்து வருகிறது.

ஐஐடி மும்பை ஆய்வு
இந்நிலையில் கொரோனாவால் லேசான அல்லது மிதமாக பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் குழந்தை பேறு வழங்கும் திறன் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் அங்குள்ள ஜஸ்லோக் மருத்துவமனை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் முடிவு ஒன்றை ஏசிஎஸ் ஒமேகாவில் வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள விபரங்கள் வருமாறு:

27 பேரிடம் ஆய்வு
கொரோனா ஆண்களுக்கு எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தை பேறுக்கான சக்திகளை குறைக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தை பேறு பிரச்சினை இல்லாத 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 பேர் நல்ல ஆரோக்கியத்தை கொண்டவர்கள். மற்ற 17 பேர் லேசான, மிதமான கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் ஆவார்கள்.

புரோட்டீன் அளவு குறைவு
இதில் இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கொரோனாவால் பாதிக்கப்படாத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனாவால் பாதித்து மீண்டு வந்த ஆண்களின் புரோட்டீன்களின் அளவு குறைந்துள்ளது. செமனோஜெலின் 1 மற்றும் ப்ரோசாபோசின் ஆகிய புரோட்டீன்கள் கொரோனா பாதிக்காதவர்களை காட்டிலும் கொரோனா பாதித்தவர்களிடம் 50 சதவீத அளவுக்கும் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையும், நகரும் தன்மையும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்ன
இதன்மூலம் லேசான, மிதமான கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆண்களின் குழந்தை பேறு திறன் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது சிறிய வகை ஆய்வு தான் எனவும், இதை இன்னும் உறுதிப்படுத்த பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications