மொத்தம் 400 காமுகர்கள்.. 16 வயது சிறுமி 6 மாதங்களாக பலாத்காரம்.. உறைய வைக்கும் சம்பவம்!
மும்பை: நெஞ்சை உலுக்கும் ஒரு மோசமான பலாத்கார சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் சில போலீஸ்காரர்களும் அடங்குவார்கள் என்பது கொடுமையின் உச்சம்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

தாயை இழந்த சிறுமி
இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து, சிறுமியை அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக கணவனோடு சிறுமி வசித்து வந்தார். ஆனால் மாமனார் கொடுமைப்படுத்தியதாக கூறி சிறுமி தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமி பலாத்காரம்
அதேநேரம், பிழைப்புக்கு வழியில்லாத அந்த சிறுமி, பிச்சை எடுத்துள்ளார். சிறுமி தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திய காமுகர்கள், கடந்த ஜனவரி 29 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை அடுத்தடுத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
சிறுமிக்காக குரல் கொடுக்க யாருமில்லை என்பதை புரிந்து கொண்டு ஒருமுறை சுமார் 33 இளைஞர்கள் ஒன்றாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது. ஜனவரி மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை ஒரு கும்பல் எடுத்துள்ளது. அந்த கும்பல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் விஷயம் வெளியுலகிற்கு தெரிய வந்தது.

400 பேர் பலாத்காரம்
போலீஸ் அதிகாரி ராஜா இதுபற்றி கூறுகையில், திருமணமான மைனர் பெண்ணை கடந்த ஆறு மாதத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சிறுமி கர்ப்பம்
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். பலாத்காரம் செய்த யாராலோ அவர் கர்ப்பிணியாகியுள்ளார். வேண்டாத கர்ப்பத்தை சுமக்கும் நிலைக்கு அந்த சிறுமி தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், குழந்தை திருமண சட்டம், பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் கொடுக்க சென்ற இடத்தில்
பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், "நான் பலரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பலமுறை நான் அம்பஜோகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுக்க சென்ற என்னை ஒரு போலீஸ்காரர் பலாத்காரம் செய்தார். என்று தெரிவித்துள்ளார். மைனர் சிறுமியை ஆறு மாதத்தில் 100 பேர் 400 முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications