மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறப்பதற்கு முன்னர் கூகுளில் தனது பெயரையே தேடிய சுஷாந்த் சிங்.. மும்பை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தான் இறப்பதற்கு முன்னர் தனது பெயரையும், இறந்த அவருடைய முன்னாள் மேனேஜர் திஷா சாலியனின் பெயரையும் கூகுள் தேடுதளத்தில் தேடியதாக மும்பை போலீஸார் பகீர் தகவலை அளித்துள்ளனர்.

Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை மும்பை போலீஸும் பீகார் போலீஸும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை அல்ல கொலை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் பல ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் சில பாலிவுட் முன்னணி நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.

    கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி

    சுஷாந்த் மரணம்

    சுஷாந்த் மரணம்

    இந்த நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறை அதிகாரி கூறுகையில் மன உளைச்சலுக்காக சுஷாந்த் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும் அதற்கான மாத்திரைகளையும் அவர் உட்கொண்டார். அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்துதான் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

    சுஷாந்த் இறப்பு

    சுஷாந்த் இறப்பு

    சமூகவலைதளங்களில் சில அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால்தான் சுஷாந்த் இறந்ததாக கூறி வருகிறார்கள். அது முற்றிலும் தவறு. எந்த கட்சியை சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதிக்கும் எதிராக சுஷாந்த் மரணத்தில் போதிய ஆதாரம் இல்லை. விசாரணையின் போது அவரது வங்கிக் கணக்கில் 18 கோடி ரூபாய் பணம் இருந்தது.

    காவல் நிலையம்

    காவல் நிலையம்

    ஆனால் அவரது குடும்பத்தினர் சொல்வது போல் சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 15 கோடியை ரியா சக்ரவர்த்தி எடுத்துக் கொண்டதற்கான நேரடி பண பரிமாற்றம் ஏதும் இல்லை. இதுகுறித்து இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம். அவரது வாக்குமூலத்தை இரு முறை பதிவு செய்துள்ளோம். அவரை காவல் நிலையத்திற்கு பல முறை அழைத்துள்ளோ.ம் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து நான் எதையும் சொல்ல மாட்டேன்.

    கூகுள்

    கூகுள்

    சுஷாந்தின் லேப்டாப் மற்றும் போனை கைப்பற்றியுள்ளோம். அதில் உள்ள தகவல்களை ஆராயவுள்ளோம். அவரது மரண விவகாரத்தில் அனைத்து கோணங்களையும் அலசி வருகிறோம். இறப்பதற்கு முன்னர் அவர் தனது பெயரையும் தனது மேலாளர் திஷா சாலியனின் பெயரையும் கூகுளில் தேடியுள்ளது தெரியவந்துள்ளது.

    கூகுளில் யூகம்

    கூகுளில் யூகம்

    அது போல் வலியில்லாமல் இறப்பது எப்படி என்பது குறித்தும் அவர் கூகுளில் தேடியது அதிர்ச்சி அளிக்கிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தார். கடந்த ஜூன் 8-ஆம் தேதி 14-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட திஷாவின் மரணத்திற்கும் சுஷாந்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கூகுளில் வந்த யூகங்கள் குறித்து சுஷாந்த் கவலைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Mumbai Police says that Sushant Singh searches his name in Google Search Engine before his death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X