70-80 கி.மீ வேகத்தில் போனால்.. கேட்கும் ஜெய் ஹோ பாடல்! இந்தியாவில் இசை சாலை! அசத்திய பொறியாளர்கள்
மும்பை: சாலையில் விபத்துகளை தவிர்க்கவும், சாலை பயணத்தை இனிமையாக்கவும் 'இசை சாலை' அமைக்கப்படுவது வெளிநாடுகளில் பொதுவான அம்சமாகும். அந்த வகையில் இந்தியாவில் முதன்முறையில் மும்பையில் இசை சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாரிமன் பாயிண்ட் முதல் வொர்லி வரை செல்லும் வடக்கு நோக்கிய சாலையில் இந்த இசை சாலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வொர்லி சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்தவுடன் வலதுபுறம் உள்ள முதல் டிராக்கில் 500 மீ தூரத்திற்கு இந்த இசை சாலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் பயணித்தால் 'ஜெய் ஹோ' எனும் பாடல் ஒலிப்பதை கேட்க முடியும். இந்த பள்ளங்கள் 'ரம்ப்ல் ஸ்ட்ரிப்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளிலும் துல்லியமான அளவுகளிலும் இவை அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில், சுரங்கப்பாதைக்குள் 500, 100, 60 மீட்டர் தூரத்தில் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இசை சாலை எப்படி வேலை செய்கிறது?
சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பள்ளங்கள் மற்றும் மேடுகள் செதுக்கப்படுகின்றன. கார் இந்த பாதை வழியாக பயணிக்கும்போது, அதன் டயர்கள் இந்த மேடு பள்ளங்கள் மீது மோதி அதிர்வடைந்து ஒலியை உருவாக்குகிறது. இசையை பொறுத்தவரை ஒவ்வொரு சுருதிக்கும் ஒரு அதிர்வெண் இருக்கிறது. பள்ளங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால், டயர்கள் வேகமாக அதிர்வடைந்து உயர்ந்த சுருதி கொண்ட சத்தம் வரும்.
India's First Musical road ⚠️
— A.R.Rahman News (@ARRahman_News) February 11, 2026
Mumbai's got a new "musical road" grooves carved in just right to play #JaiHo song when cars zip over at the perfect speed.
Everywhere its @ARRahman ❤pic.twitter.com/WpBAFqGaDe
அதுவே பள்ளங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தால், குறைந்த சுருதி கொண்ட சத்தம் வரும். இப்படித்தான் இசை உருவாக்கப்படுகிறது. இந்த மேடு பள்ளங்களை சரியான இடைவெளியில் அமைப்பதன் மூலம் குறிப்பிட்ட வேகத்தில் இதன் மீது டயர்கள் உரசினால், இசை ஒன்றாக சேர்ந்து பாடலாக கேட்கும்.
இதில் முக்கியமான அம்சமே வேகம்தான். குறைந்த வேகத்தில் போனால், பாடலை சரியாக கேட்க முடியாது. அதேபோல அதிக வேகமாக போனாலும் பாடல் பாஸ்ட் ஃபார்வர்ட் செய்ததை போல இருக்கும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications