மனைவி & மாமியாரை வைத்து நிர்வாண பூஜை.. கீழ்த்தரமான செயலை செய்த கணவர்! ஷாக் சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவில் மாந்திரீகப் பூஜை செய்வதாகச் சொல்லி இளைஞர் ஒருவன் தனது மனைவி மற்றும் மாமியாரின் நிர்வாண போட்டோக்களை எடுத்துள்ளார். பிறகு அதையே அவர் மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளனர்.
நமது நாட்டில் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி பணம் அடிக்கும் கும்பல் இருந்து வருகிறது. மக்களை ஏமாற்றும் இந்தக் கும்பல், பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்யப் பார்ப்பார்கள். பண மோசடி மட்டுமின்றி பல மோசமான சம்பவங்களையும் செய்கிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

மகாராஷ்டிரா நிர்வாணப் பூஜை
இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை நிர்வாணமாகப் பூஜை செய்ய வற்புறுத்தியிருக்கிறார்.
அந்த நபரின் மைத்துனர், அதாவது மனைவியின் தம்பிக்குத் திருமணமாகவில்லை. நீண்ட காலமாகப் பெண் பார்த்தும் செட் ஆகவில்லையாம். இதனால் அவர்கள் குடும்பத்தினர் கவலையில் இருந்துள்ளனர். மாந்திரீகப் பூஜை செய்தால் திருமணமாகிவிடும் என அந்த நபர் கூறியிருக்கிறார். திருமணம் நல்லபடியாக நடக்க இதுபோன்ற பூஜை செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
போலீஸ் நிலையத்தில் புகார்
திருமணம் நடக்க வேண்டும் என்பதால் அவர்களும் எல்லாப் பூஜைகளையும் செய்துள்ளனர். அவர் சொன்னபடி கேட்டுள்ளனர். ஆனால், அந்த நபர் பூஜை என்று அதை போட்டோக்களை எடுத்துள்ளார். பிறகு அந்த போட்டோக்களை உறவினர்கள் சிலருக்கும் அனுப்பியுள்ளார். இதனால் வெறுத்துப்போன அந்தப் பெண் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
என்ன நடந்தது?
இதுகுறித்து கடந்த ஜூலை 3ஆம் தேதி வாஷி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை இதுபோல பூஜை எனச் சொல்லி அந்த நபர் மோசமான செயல்களைச் செய்திருக்கிறார். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் தேவரியாவைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர்..
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "மைத்துனருக்கு நல்லபடியாகத் திருமணம் நடக்க வேண்டும் என்றால் நிர்வாணப் பூஜை செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 15ம் தேதி சொல்லியிருக்கிறார். பிறகு தனது மனைவி மற்றும் மாமியார் ஆகியோரை ஆடைகள் இல்லாமல் சில சடங்குகளை வற்புறுத்திச் செய்யச் சொல்லியிருக்கிறார்.
கீழ்த்தரமான செயல்
அதை அவர் போட்டோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டாராம். பின்னர் அந்தப் படங்களுடன் அஜ்மீருக்கு வருமாறு கூறியிருக்கிறார். மனைவியும் அவர் சொல்வதைக் கேட்டு படங்களுடன் அஜ்மீருக்குச் சென்றுள்ளார். ஆனால், அந்தப் படங்களை மனைவியின் தந்தை மற்றும் சகோதரருக்கே அனுப்பியுள்ளார்" என்றார். தனது கணவரே நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதையும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களையும் செய்ததால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 351(2) (குற்றவியல் மிரட்டல்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையை போலீசார் தொங்கியுள்ளனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications