சின்ன "கப் கேக்..." எளிமையாக 84வது பிறந்தநாள் கொண்டாடிய ரத்தன் டாடா தாத்தா
மிகப்பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய சக்கரவர்த்தி ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.
மும்பை: இன்றைக்கு நாம் பயன்படுத்தும் குடிநீர், உப்பு, டீ, இரும்பு, தாது, தங்க நகைகள், கைக்கடிகாரம், கார், விமானம் என பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ள ரத்தன் டாடா எளிமையான முறையில் தனது 84வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
Recommended Video
டாடா குழுமங்களின் மூன்றாவது தலைவர் ரத்தன் டாடா. சூரத் நகரில் நாவல் டாடா சுனு தம்பதியருக்குப் பிறந்த ரத்தன் டாடா, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படித்து விட்டு ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றியவர்.
ஹர்வர்டில் இருந்து திரும்ப இந்தியாவுக்குத் திரும்பிய அவர், தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். 31 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டில் டாடா குழுத்தின் 3 வது தலைவரானார். ரத்தன் டாடா தலைவரான பிறகு டாடா குழுமம் அசுர வளர்ச்சி கண்டது.

பிசினஸ் உலகம்
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் குடிநீர், உப்பு, டீ, இரும்பு, தாது, தங்க நகைகள், கைக்கடிகாரம், கார், விமானம் என பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

திருமண முடிவு
பிசினஸ் மீது தீவிர காதல் கொண்டதால் ரத்தன் டாடா இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. 4 முறை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவு எடுத்தும் பல்வேறு காரணத்தால் திருமணம் செய்து கொள்ளவில்லை

தேசப்பற்று
டாடாவுக்கு இளகிய மனசு. தேசப்பற்றும் அதிகம். ஒரு முறை பாகிஸ்தான் அரசு, டாடாவின் சுமோ கார்களுக்குப் பெரிய ஆர்டர் ஒன்றை அளித்தது. எனது தயாரிப்பு ஒன்றுகூட பாகிஸ்தானில் விற்கக் கூடாது என்று பல கோடி ரூபாய் ஆர்டரை நிராகரித்தவர் டாடா.

சாதனை நாயகர்
எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெறுவார்.
உங்கள் மீது எறியப்படும் கற்களைக் கொண்டு கட்டடம் எழுப்பப் பழகுங்கள் என்று சொன்னவர் ரத்தன் டாடா. இவர் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கற்களும் இன்று வைரமாய், தொழிற்துறையில் ஜொலித்துக் கொண்டுள்ளது.

நானோ கார்
உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தாலும், கர்வம் என்பது துளிகூட இல்லாதவர். மிகவும் எளிமையானவர். எத்தனையோ விலை உயர்ந்த கார்கள் ரத்தன் டாடாவிடம் இருந்தாலும் உள்ளூரில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது தனது தயாரிப்பான நானோ அல்லது நெக்ஸானில்தான் பயணிப்பாராம்.

எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்
டிசம்பர் 28ஆம் தேதி தனது 84வது பிறந்நாளை எளிமையாக கொண்டாடியுள்ளார். ஒரு சிறுவனுடன் சிறிய அளவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் ரத்தன் டாடா. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ரத்தன் டாடாவிற்கு வயதானாலும் அதே கம்பீரம் குறையாமல் காணப்படுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications