மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஆர்பி மோசடி.. ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு.. மும்பை கமிஷ்னர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

மும்பை: விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.

வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸில் அதிகம் மக்கள் தங்கள் சேனலை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி மோசடியை அரங்கேற்றியதாக ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் செட்அப் பாக்ஸில் தில்லுமுல்லு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்தார்.

இப்படி போலியாக அதிகரித்து காட்டியதன் மூலமே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் ரிபப்ளிக் டிவி வந்திருப்பதாகவும், இந்த மோசடி தொடர்பாக இன்று அல்லது நாளை ரிபப்ளிக் டிவி நிறுவனத்தார் விசாணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் கூறினார்.

விசாரிக்கப்படுவார்கள்

விசாரிக்கப்படுவார்கள்

மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் இதுபற்றி மேலும் கூறுகையில், "நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக விசாரித்த போது, அதிக டிஆர்பி காட்டுவதற்காக இந்த காரியங்களை செய்ததை பிடிப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த மோசடி தொடர்பாக ரிபப்ளிக் டிவி தொலைக்காட்சியின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

யாரும் தப்ப முடியாது

யாரும் தப்ப முடியாது

சேனல்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்படும். விளம்பரதாரர்களிடமிருந்து அவர்கள் பெறும் நிதி மற்றும் "அவை குற்றங்களின் வருமானத்திலிருந்து வந்தவையா". என்பது குறித்தும் விசாரிப்போம். விசாரணையில் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியும் அடங்குவாரா என்று கேட்கிறீர்கள். சேனலில் சம்பந்தப்பட்ட எவரும், எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேள்வி கேட்கப்படுவார்கள், தேவைப்பட்டால் அவர்கள் விசாரிக்கவும் படுவார்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.. குற்றம் நிரூபணம் ஆனால், சேனல்களின் கணக்குகள் பறிமுதல் செய்யப்படும். அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளில் வைக்கப்படும் பாக்ஸ்

வீடுகளில் வைக்கப்படும் பாக்ஸ்

இந்த டிஆர்பி மோசடி என்பது வீடுகளில் டிவி சேனல்களை மக்கள் எந்த அளவிற்கு பார்க்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக கணக்கீடு மீட்டர் வைக்கப்படும். அதில் போலியாக, மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி மோசடி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக விளம்பர நிதியைப் பெற்றிருக்கிறர்கள். இது மோசடியான வருமானமாகக் கருதப்படும். இப்படி பல முக்கிய விளம்பர வருவாய்கள் வந்துள்ளது,.

தவறான டிஆர்பி

தவறான டிஆர்பி

தவறான டிஆர்பி விவகாரத்தில். டிஆர்பி கணக்கீட்டிற்காக குறிப்பிட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து மதிப்பீட்டு மீட்டர்களை வைத்து வரும் ஹன்சா என்ற நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், மூன்று சேனல்களுடன் ரகசியமாக டேட்டாக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். டிஆர்பிக்காக ஊடக நிறுவனங்கள் தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும் என்று வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அந்த டேட்டாக்களை பார்த்தால், ஆங்கிலம் பேசாத ஏழை படிக்காத குடும்பங்கள் ஆங்கில தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறது. தங்கள் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக டிவியை ஆன் செய்து வைக்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 400-500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது" என்றார்...

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங்கின் கருத்தை திட்டவட்டமாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: "சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணையில் விசாரித்தோம் என்பதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் மீது ரிபப்ளிக் டிவி சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும். ரிபப்ளிக் டிவி பற்றி குறிப்பிடும் ஒரு பார்க் அறிக்கை கூட இல்லை. இந்திய மக்களுக்கு உண்மை தெரியும். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பரம் பிர் சிங்கின் விசாரணை மூடு மந்திரமாக இருந்தது. எனவே இப்போதைய நடவடிக்கை என்பது பால்கர் வழக்கு, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு அல்லது வேறு ஏதேனும் வழக்கு குறித்து ரிபப்ளிக் டிவி அம்பலப்படுத்திய விசாரணை அறிக்கைகள் காரணமாக எடுக்கப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கையாகும். இந்த வகையான இலக்கு, உண்மையை இன்னும் ஆழமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிபப்ளிக் டிவியில் பணியாற்றும் அனைவரின் தீர்மானங்களையும் பலப்படுத்துகிறது. எந்தவொரு புகாரிலும் பார்க் ரிபப்ளிக் டிவியை பற்றி குறிப்பிடவில்லை என்பதால், பரம் பிர் சிங் இன்று முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறார். . அவர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் எங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். " இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Republic TV is among three channels being investigated for gaming ratings and using it to spread fake narratives and gain ad revenues, the Mumbai police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X