ஓமிக்ரான் அச்சம்: மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை
மும்பை : மகராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. B1.1 529 எனும் புதிய வகை கொரோனா நவம்பர் 25ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 59 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சத்தால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 13 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருந்த நிலையில் நேற்று மட்டும் 3 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக 3 வயது குழந்தைக்கும் உருமாறிய தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதியதாக தொற்று ஏற்பட்டவர்கள் பிம்ப்ரி சிந்தவாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதியதாக தொற்று ஏற்பட்டவர்கள் முறையே 48, 25 மற்றும் 37 வயதுடையவர்கள். இவர்கள் தான்சானியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி 32 பேருக்கு ஓமிக்ரான தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 17, ராஜஸ்தானில் 9, குஜராதில் 3, கர்நாடகாவில் 2 மற்றும் டெல்லியில் ஒரு நபருக்கு புதிய உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications