ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. ஜாமீன் கிடைக்குமா?.. இன்று விசாரணை!
மும்பை: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 8 பேரை 14 நாள் நீதிமன்ற காவலிலில் நீதிமன்றம் அனுப்பியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடலோரத்தில் இருந்த ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஷாருக்கானின் மகன் கைது
அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், முக்கிய புள்ளிகள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுளளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஒருபக்கம் அதிர்ச்சி தகவல்ககள் வலம் வருகின்றன.

போலீஸ் காவல்
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டியதிருப்பதால் ஆர்யான் கானை அக்டோபர் 13 வரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதனை தொடர்ந்து ஆர்யான் கானை அக்டோபர் 7-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வாட்ஸ்அப் சாட் விபரங்கள், ஆரியன் கானிற்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் கூறியது.

நீதிமன்ற காவல்
இந்த நிலையில் ஆர்யான் கான் உள்பட 8 பேரை மும்பை நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது ஆர்யான் கான் உள்ளிட்டோரை அக்டோபர் 11 வரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கோரியது. ஆனால் இதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் ஆர்யான் கான் உள்பட 8 பேரை 14 நாள் நீதிமன்ற காவலிலில் அனுப்பியது.

ஜாமீன் கிடைக்குமா?
ஆர்யான் கான் தனது வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் விசாரணை நடக்கவில்லை. இவரது ஜாமீன் மனு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாமீனுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆர்யான் கானுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications