சரத்பவார் என்சிபியில் பாகப் பிரிவினை: அஜித் பவார்- மகாராஷ்டிரா ; சுப்ரியா சுலே - தேசிய அரசியல்!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் நேற்று அறிவித்த நிலையில் அக்கட்சியின் அடுத்த தலைமை தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் சரத்பவார். அவரது ராஜினாமா முடிவை என்சிபி தொண்டர்கள் இன்னமும் ஏற்க முடியாதவர்களாக தவித்து வருகின்றனர். சரத்பவாருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி தங்களது முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் என்சிபி கட்சியில் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. என்சிபியைப் பொறுத்தவரையில் அதன் தொடக்க காலத்தில் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார்தான் அடுத்த வாரிசாக இருந்து வந்தார். திடீரென சரத்பவார் மகள், சுப்ரியா சுலேவை கட்சிக்குள் திணித்தார். சுப்ரியாவும் 3 லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்று அக்கட்சியின் டெல்லி முகமாக இருந்து வருகிறார். ஆகையால் தற்போது அஜித் பவார், சுப்ரியா சுலே இடையே மட்டுமே புதிய தலைமைக்கான போட்டி நிலவுகிறது.
அஜித் பவாரைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிரா அரசியலில் அத்தனையும் எதிர்கொள்ளக் கூடியவர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு பாஜகவுடன் இணைந்தவர். பின்னர் மீண்டும் எந்தவித தயக்கமும் இல்லாமல் என்சிபிக்கு ஓடிவந்தவர். இப்போதும் கூட ஒட்டுமொத்த கட்சியையே அவர் கபளீகரம் செய்து சிவசேனாவைப் போல பாஜகவிடம் ஒப்படைத்துவிடுவாரோ என்கிற அச்சம் உண்டு. அதனாலேயே சரத்பவார், கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்கிற கருத்தும் கூட முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தலைமை மாற்றத்தை சுமூகமாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது டெல்லி அரசியல்- தேசிய அரசியலை சுப்ரியா சுலேவும் மாநில அரசியலை அஜித் பவாரும் பார்த்துக் கொள்வது என்பதாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் இந்த அதிகாரப் பகிர்வு என்பது எப்படி எத்தனை காலத்துக்கு நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதும் ஒரு கேள்வி. ஏற்கனவே டெல்லியில் ஒரு பிரளயம் ஏற்படப் போகிறது என சுப்ரியா சுலே கூறியிருந்தார். அந்த பிரளயம் என்ன என்பது தெரியாத நிலையில் அடுத்த சில நாட்களில் என்சிபி தொடர்பான குழப்பங்களுக்கு விடை கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக என்சிபி கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பிரஃபுல் படேல் கூறியதாவது: சரத்பவார் நேற்று தெளிவாக தனது முடிவை அறிவித்துவிட்டார். அடுத்த தலைமுறை கட்சியை வழிநடத்தட்டும் என சரத்பவார் விரும்பி இருக்கலாம். அவரது ராஜினாமா முடிவு எங்கள் யாருக்கும் முன்னமே தெரியாது. இன்று கூட அஜித் பவார், சுப்ரியா சுலே, நான், பூஜ்பால் என பலரும் அவரிடம் பேச முயற்சித்தோம். அவர் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய 2 அல்லது 3 நாட்கள் எடுத்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளோம். தற்போதைய நிலையில் நான் அகில இந்திய துணைத் தலைவர் பதவியில் இருக்கிறேன். அதற்காக அகில இந்திய தலைவர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை. என்சிபியில் எந்த பிளவும் இப்போதைக்கு இல்லை; அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications