எல்கர் பரிஷத் வழக்கில்.. கைது செய்யப்பட்ட.. சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்
மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மதியம் 1.30 மணியளவில் காலமானார்.
Recommended Video
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. 84 வயதான இவர், மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020 அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இவரை உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாமீன் மறுப்பு
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து மே இறுதி வரை சிறை மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டேன் சுவாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
உபா சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வென்டிலேட்டர் சிகிச்சை
பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்கள் அவதிப்பட்டு வந்த ஸ்டேன் சுவாமிக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. உடல்நிலை மோசமடைந்தத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

காலமானார்
இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தகவலை ஸ்டேன் சுவாமியின் ஜாமீன் குறித்த விசாரணையின் போது, அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சனிக்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

மனித உரிமைகள் ஆணையம்
பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் தான் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

ஸ்டேன் சுவாமி
திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தான், கடந்த 2020 அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு இவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications