INDIA இந்தியாவுல ஆட்சிக்கு வரட்டும்.. ராமர் கோவில்ல என்ன நடக்குதுனு பாருங்க! காங்.தலைவர் சொன்ன ப்ளான்
மும்பை: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர் கோவில் சுத்திகரிக்கப்படும் எனவும், ராமர் சிலை பிரதிஷ்டையை எதிர்த்த சங்கராச்சாரியார்கள் கோவிலை சுத்தப்படுத்துவார்கள் என மும்பை காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன.

வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இந்தியா நாட்டை ஆளப் போகிற அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
ராமர் கோவில்: தென் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் வடமாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வட மாநிலங்களில் தேர்தலை பொருத்தவரை ராமர் கோயிலில் பிரதானமாக இருக்கிறது ராமர் கோயில் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பேசி வருகிறார்.
பாஜகவுக்கு பலன்: அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோயில் குறித்து பேசுவதை தவிர்த்து வருகின்றன. குறிப்பாக உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியினராக இருந்தாலும் ராமர் கோயில் குறித்து பேசுவதில்லை. காரணம் ராமர் கோயிலால் பாஜக நன்மை அடையுமா என்ற கேள்விக்கு 56 சதவீத மக்கள் நிச்சயம் நன்மை கிடைக்கும் என தெரிவித்திருக்கின்றனர் 26 சதவீதம் பேர் குறைந்த அளவு பலன் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
இந்தியா கூட்டணி: அப்படி பார்க்கும்போது வடமாநிலங்களில் சுமார் 75 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். இதன் காரணமாகவே 80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை பாஜக வெல்லும் என அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர் கோவில் சுத்திகரிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், "இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர் கோவில் சுத்திகரிக்கப் போகிறோம்.
காங்கிரஸ் கருத்து: பிரான் பிரதிஷ்டையை சங்கராச்சாரியார்கள் எதிர்த்தனர், நான்கு சங்கராச்சாரியார்களும் ராமர் கோவிலை சுத்தப்படுத்துவார்கள். அதில் ராமர் தர்பார் நிறுவப்படும். அது ராமர் சிலை அல்ல, ஆனால் ராம் லல்லாவின் குழந்தை வடிவமான ராமர் கோயில் கட்டுமானத்தில் நாங்கள் அதைச் செய்வோம்." என கூறியுள்ளார். இது உபி, மபி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் அவ்வாறு கூறுவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
பின்னணி: உத்தர பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நரேந்திர மோடி அதனை பிரதிஷ்டை செய்து வைத்தார். ஆனால் கோவில் வேலைகள் முடிவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக ராமர் கோயில் திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோயிலை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டின. அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சங்கராச்சாரியார்களும் மடாதிபதிகளும் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்தே தற்போது காங்கிரஸ் இந்த கருத்தை கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications