சர்ச்சையைக் கிளப்பிய ”தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.. அடுத்த அணுகுண்டுடன் அக்னி கோத்ரி! ”தி டெல்லி ஃபைல்ஸ்”!
மும்பை : காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் மையமாகக் கொண்டு எடுக்கபட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட நபராக மாறிய விவேக் அக்னிகோத்ரி அடுத்ததாக தி டெல்லி ஃபைல்ஸ் என்ற படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றது.
1980களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியானது.

தி காஷ்மீர் பைல்ஸ்
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்துத்வா அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

நாடு முழுவதும் சர்ச்சை
மார்ச் 11 அன்று நாடு முழுவதும் வெளியிடப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். சில விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்களால் பிரச்சனைக்குரிய அரசியலுக்காக இந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளிடையே இந்தப் படம் விவாதத்தைத் தூண்டியது.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி
தி காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு முன், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 1966ல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணத்தை அடிப்படையாகக் கொண்டு "தி தாஷ்கண்ட் பைல்ஸ்" படத்தை இயக்கினார். மேலும் "சாக்லேட்", "ஹேட் ஸ்டோரி" மற்றும் "ஜிட்" ஆகியவை அவரது எண்ணத்தில் உதித்தவைதான். இந்நிலையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, அடுத்து 'தி டெல்லி ஃபைல்ஸ்' என்ற படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி டெல்லி ஃபைல்ஸ் படம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. கடந்த நான்கு வருடங்களாக கடுமையாக உழைத்து நேர்மையாக அந்தப் படத்தை உருவாக்கினோம். காஷ்மீர் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். எனது அடுத்தப் படத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்றும், மற்றொரு பதிவில், 'தி டெல்லி ஃபைல்ஸ்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications