ஆப்பிரிக்க சீட்டாக்களை கொண்டு வந்து நோயை பரப்பிட்டாங்க.. காங் தலைவர் கிளப்பிய பகீர்.. பாஜக கேலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலியால் தான் தற்போது நாட்டில் லம்பி ஸ்கின் நோய் பரவி விட்டதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தோள் கழலை என்னும் தோல் கட்டி நோய் (லம்பி ஸ்கின்) வட இந்தியாவில் பசு மாடுகளுக்கு அதிகம் பரவியிருக்கிறது.

இதனால், நூற்றுக்கணக்கான மாடுகள் உயிரிழந்தன. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை இந்த நோய் பரவல் ஏற்படுத்தியது.

சிவிங்கிப் புலியால் பரவின

சிவிங்கிப் புலியால் பரவின

லம்பி ஸ்கின் நோய் பரவல் கடந்த சில மாதங்களாக வட இந்திய மாநிலங்களில் உள்ள கால்நடைகள் மத்தியில் பரவியதை காண முடிந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலி (சீட்டாக்கள்) மூலமே இந்தியாவில் லம்பி ஸ்கின் நோய் பரவிவிட்டதாக மகராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரி செய்ய முடியாது

சரி செய்ய முடியாது

இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கூறுகையில், ''நைஜீரியாவில் லம்பி வைரஸ் தொற்று பரவல் நீண்ட காலமாகவே உள்ளது. சீட்டாக்கள் அங்கிருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு வேண்டும் என்றே இதை செய்திருக்கிறது. சீட்டாக்களை கொண்டு வருவதால், நாட்டில் நிலவும் பண வீக்கம் மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பிரச்சினையையோ விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையோ சரி செய்ய முடியாது.

லம்பி வைரஸ் நாட்டில் பரவி விட்டது

லம்பி வைரஸ் நாட்டில் பரவி விட்டது

ஆனால் இதையும் மீறி சீட்டாக்கள் வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்தே லம்பி வைரஸ் நாட்டில் பரவி விட்டது'' என்றார். மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் இந்த வினோத கருத்துக்கு பாஜக உடனடியாக பதிலடி கொடுத்தது. இது தொடர்பாக பாஜகவ சேர்ந்த ஷேசாத் பூன்வல்லா கூறுகையில், ''நானா பட்டோலே மகாராஷ்டிர மாநிலத்தின் ராகுல் காந்தி'' என்று சாடியுள்ளார்.

பொய்களையும் வதந்திகளையும்...

பொய்களையும் வதந்திகளையும்...

இது குறித்து தனது ட்விட் பதிவில் சேஷாத் பூனவல்லா கூறியிருப்பதாவது:- 'மகாராஷ்டிராவின் ராகுல் காந்தியான நானா பட்டோலே, லம்பி வைரஸ் நைஜீரியாவில் உருவானது என்றும் மோடி சீட்டாக்களை பிடித்து வந்ததால்தான் இந்தியாவில் இந்த வைரஸ் வந்துவிட்டதாக கூறுகிறார். சீட்டாக்கள் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. நைஜீரியாவும் நமீபியாவும் வெவ்வேறு நாடுகள் என்று அவருக்கு தெரியுமா? காங்கிரஸ் எப்போதுமே பொய்களையும் வதந்திகளையும் பரப்பும்.

பொய்கள் நினைவில் இருக்கிறதா?

பொய்கள் நினைவில் இருக்கிறதா?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் பற்றி காங்கிரஸ் பரப்பிய பொய்கள் நினைவில் இருக்கிறதா? உண்மையில் அவர்கள் பாதுகாப்பான தடுப்பூசியை போட்டுக்கொள்ள விடாமல் மக்களை அச்சுறுத்த்தினார்கள். போலி செய்திகள் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சி இல்லையா இது? காங்கிரஸ் கட்சி இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா? என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+