மாமியார் சவிதாவின் தலை பிடித்து ஓங்கி சுவற்றில் அடித்தும்.. புதுப்பெண்ணுக்கு அடங்காத கோபம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா போவர்தன் நாக்கா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் பிரதிக்ஷா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆகாஷின் அம்மா சவிதாவும் ஆகாஷ் உடன் வசித்து வந்தள்ளார். இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி ஏற்பட்ட தகராறில் மாமியார் சவிதாவை மருமகள் பிரதிக்ஷா என்ன செய்தார் தெரியுமா? இப்போது மொத்த மகாராஷ்டிராவிலும் பிரதிக்ஷா பற்றித்தான் பேச்சாக உள்ளது.
மாமியார் மருமகள் சண்டை என்பது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. மாமியார் என்பவர் மருமகளை அடக்கி ஆள வேண்டும் என்றும், மருமகள் என்பவர் மாமியாரை அடக்கி ஆள வேண்டும் என்றும் நினைப்பதும் பல்வேறு இடங்களில் நடக்கிறார்கள். தான் என்ன சொன்னாலும் மருமகள் பொறுத்து போக வேண்டும் என்று மாமியார் நினைப்பதும், தான் என்ன செய்தாலும் மாமியார் கண்டு கொள்ளக்கூடாது என்று மருமகள் நினைப்பதும் பல இடங்களில் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.

திருமணம்
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா போவர்தன் நாக்கா பகுதியில் உள்ள பிரியதர்ஷினி காலனியை சேர்ந்தவர் சவிதா (45வயது). இவரது மகன் ஆகாஷ். ஆகாசுக்கு பெண் தேடி வந்துள்ளார் அவரது அம்மா சவிதா.. கடந்த ஆறு மாதம் முன்பு பர்பானியை சேர்ந்த 22 வயதாகும் பிரதிக்ஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
தனியாக வசித்த மகன்
இளைஞர் ஆகாஷ் லாத்தூர் ஏரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமாக ஆகாஷ் அங்கேயே தங்கியிருந்தார். அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து செல்வார்.. இதனால் அவரது மனைவி பிரதிக்ஷா மாமியார் சவிதா உடன், ஜல்னா பிரியதர்ஷினி என்ற காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமியார் மருமகள் மட்டுமே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது மாமியார், மருமகள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாமியார் மீது தாக்குதல்
சம்பவம் நடந்த அன்று மாமியார், மருமகள் இடையே வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கி உள்ளார்கள். அப்படி தாக்கி கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த மருமகள் பிரதிக்ஷா, தனது மாமியார் சவிதாவை , ஆவேசத்துடன் தலையின் முடியை ஓங்கி இழுத்து பிடித்து வீட்டின் சுவற்றில் மோதச் செய்தார். அத்துடன் ஆத்திரம் அடங்காத அவர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாமியார் சவிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
எடை அதிகம்
இதனால் பயந்துபோன பிரதிக்ஷா, மாமியாரின் உடலை அப்புறப்படுத்தி மறைக்க முயன்றுள்ளார். இதற்காக உடலை ஒரு சாக்கு பையில் போட்டுள்ளார். ஆனால் எடை அதிகமாக இருந்ததால் மூட்டையை நகர்த்த முடியாமல் தவித்துள்ளார். பிரதிக்ஷாவின் நடவடிக்கையை வீட்டின் உரிமையாளர் பார்த்து சந்தேகப்பட்டார். அப்போது தான் நடந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
மருமகள் கைது
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தை உறுதி செய்த உடன் புதுப்பெண் பிரதிக்ஷா வீட்டை வீட்டு ஓடினார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், ரயில் ஏறி தப்பி பர்பானியில் பதுங்கி இருந்த பிரதிக்ஷாவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரை மருமகள் காலி செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications