டெல்லி பறந்த பட்னாவிஸ்.. மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்!
மும்பை: ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிராவில் எப்போது மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மண்ணின் மைந்தன் என்றழைக்கப்படும் சிவசேனா கட்சி இன்று பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அணியில் இருந்து விலகியதோடு, உத்தவ் தாக்கரேயை ஆட்சியில் இருந்தும் கவிழ்த்தனர்.
தொடர்ந்து அதிருப்தி அணியினரான ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியையும் கைப்பற்றினர்.

டெல்லியில் தேவேந்திர பட்னாவிஸ்
இதையடுத்து தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று ஏக்னாத் தலைமையிலான அதிருப்தி அணியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் எப்போதும் நடக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு மத்தியில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி வந்துள்ளார். அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஆலோசனைக்காக தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏக்னாத் ஷிண்டேக்கு உடல்நலன் பாதிப்பு
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், புதிய அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் வாங்க தேவேந்திர பட்னாவிஸ் மட்டும் வருகை தந்து உள்ளதாக மராட்டிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை பட்னாவிஸ் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் இன்று அல்லது அடுத்த வார துவக்கத்தில் இருக்கலாம் என்று ஒரு பக்கம் யூகங்கள் கொடி கட்டி பறக்கின்றன.

விமர்சிக்க தொடங்கிய எதிர்க்கட்சிகள்
ஆனால், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து தாமதம் ஆகி வருவதை கேலிக்குள்ளாக்கி விமர்சிக்க தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சிகள், ஏக்நாத் ஷிண்டேவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையும் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவை பட்டியலுடன் டெல்லி சென்று இருப்பதையும் முடிச்சு போட்டு விமர்சித்துள்ளன. இது எதேச்சையாக நடந்ததா? அல்லது மகாராஷ்டிர அரசை யார் நடத்துகிறார்கள் என்பதற்கான சான்றா? என விமர்சித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் இருக்கக்கூடும் என்றும் அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் ஒரு நம்பிக்கையாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார்.

சொன்னதற்கு மாறாக காலதாமதம்
இதனால், அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடப்பது என்பது கடினமான ஒன்று என ஒருசாரார் கூறி வருகின்றனர். இருப்பினும் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா திரும்பியதும் அமைச்சரவை விரிவாக்கம் உடனே நடக்கும் அதாவது இன்றே நடக்கும் என்று பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் திடமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூலை 27 ஆம் தேதி, அமைச்சரவையை இன்னும் மூன்று தினங்களுக்குள் விரிவாக்கம் செய்துவிடுவேன் என கூறியிருந்தார். தேவேந்திர பட்னாவிசும் இதை ஆமோதிக்கும் விதமாக விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்றார். ஆனால், இரு தலைவர்களும் சொன்னதற்கு மாறாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எப்போது அமைச்சரவை விரிவாக்கம்
ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, ''அமைச்சரவை வரும் சனிக்கிழமைக்குள் விரிவாக்கம் செய்யப்படும்'' என்றார். அதேவேளையில், பாஜக தலைவர் சுதிர் முங்கண்டிவார் 'ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்' என்றார். அமைச்சரவை விரிவாக்கம் இப்படி தொடர்ந்து இழுபறியாகவே சென்று கொண்டிருப்பது மராட்டிய ஆளும் கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைகளை கைப்பற்ற போட்டி
எதிர்க்கட்சிகளும் கூட்டணிக்குள் இப்போதே குளறுபடி ஏற்பட்டுவிட்டதாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால், மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் தினம் தினம் ஒரு பரபரப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நீர்வளத்துறையை கைப்பற்றுவதில் பாஜக பிடிவாதமாக உள்ளதாக அங்குள்ள பாஜக தலைவர்கள் மத்தியில் பேசும் போது சொல்கிறார்கள். அதேவேளையில், நிதித்துறை தங்கள் வசமே இருக்க வேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டே அணியினரின் எண்ணமாக உள்ளது. இப்படி இரு தரப்பினருக்கும் இடையே எந்தெந்த துறைகளை யார் வசம் ஒப்படைப்பது என்பது தொடர்பாகவும் தீவிர ஆலோசனைகள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது.
Recommended Video

விடாப்பிடியாக 30 எம்.எல்.ஏக்கள்
இந்த இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி வைத்திருந்த துறைகளை பாஜகவுக்கு ஒதுக்கலாம் என்றும் சிவசேனா தன்வசம் வைத்திருந்த துறைகளை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கொடுத்துவிடலாம் என்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள 30 எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏக்நாத் ஷிண்டே தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது அவருக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதே மகராஷ்டிர அரசியலில் விவாதிக்கப்படும் ஹாட் டாபிக் ஆக உள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications