அஜித் பவாருடன் விமான விபத்தில் உயிரிழந்த பிங்கி மாலி.. யார் இவர்? வெளியான முக்கிய தகவல்
மும்பை: அஜித் பவார் சென்ற விமானம் இன்று மகாராஷ்டிராவில் விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் அவருடன் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். அப்படி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் பிங்கி மாலி.. யார் இந்த பிங்கி மாலி.. அவர் ஏன் அஜித் பவாருடன் விமானத்தில் பயணித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

பிங்கி மாலி
இந்த விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது விமானப் பணிப்பெண் பிங்கி மாலி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சோகச் சம்பவம், மும்பையில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உத்தரப் பிரதேசத்திலுள்ள அவரது பூர்வீகக் கிராமத்தைத் துயரத்தில் ஆழ்த்தியது. மும்பையின் வோர்லி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த பிங்கி, விபத்துக்குள்ளான விமானத்தில் கேபின் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
விபத்து
இன்று காலை, மகாராஷ்டிரப் பஞ்சாயத்துத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அஜித் பவார் பாராமதி சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.. விமானம் தரையிறங்கும் முயற்சியில், தோல்வியில் முடிந்த நிலையில், அது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. மோசமான வானிலை விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக ஓடுபாதை விமானிக்குச் சரியாகத் தெரியவில்லை. இதனால் முதல்முறை தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி, மீண்டும் முயன்றுள்ளார். அப்போது தான் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்ததாக மகாராஷ்டிர விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
யார் இந்த பிங்கி மாலி
பிங்கியின் தந்தை சிவகுமார் மாலி மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு சிவசேனா தலைவர். அஜித் பவார் தனது விமானத்தில் வருவதால் அவரிடம் பேசி ஒரு மீட்டிங்கிற்கு ரெடி செய்வதாகப் பிங்கி தந்தையிடம் கூறியிருக்கிறார். ஆனால், விமானம் ஏறிய பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சிவ்குமார் கூறியுள்ளார். மேலும், விமானத்தில் ஏறியபோது தனது மகள் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிங்கி குடும்பத்துடன் மகாராஷ்டிராவில் வசித்து வந்தாலும் அவர்களின் சொந்த ஊர் உத்தரப் பிரதேசம்.. ஜான்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பைன்சா (Bhainsa) பிங்கியின் பூர்வீகக் கிராமமாகும். பிங்கியின் தந்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொந்தக் கிராமத்திற்கு வருவார் என்கிறார்கள் பைன்சா கிராம மக்கள். ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை சமயத்தில் பிங்கியின் தந்தை வருவார் என்றும் மொத்தக் குடும்பத்தினரும் கூட 1.5 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சோகம்
பிங்கிக்கு கரன் என்ற சகோதரனும் ப்ரீத்தி என்ற சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மகாராஷ்டிராவில் தான் கல்வி கற்றனர்.. விமானப் போக்குவரத்துத் துறையில் சேரும் முன், பிங்கி தனது பள்ளிப் படிப்பையும் உயர் கல்வியையும் தானேவில் முடித்தார். அவரது திடீர் மரணம் வோர்லியில் பிங்கி வீட்டின் அருகே வசிப்போரை மட்டுமின்றி, பூர்வீகக் கிராமமான பைன்சா கிராம மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications