ரகசிய திருமணம் நடந்து 10 நாட்களில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கைது.. நடந்தது என்ன?
மும்பை: சக நடிகை புகாரின் பேரில் திருமணமான 10 நாட்களில் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சாவந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ராக்கி சாவந்த் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அடில் துரானி
இந்த நிலையில் அடில் துரானி என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார் ராக்கி சாவந்த். இவருடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலனை கரம் பிடித்தார் ராக்கி சாவந்த். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

10 நாட்கள்
இந்த நிலையில் திருமணமான 10 நாட்களில் ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், ராக்கி சாவந்த் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக ஷெர்லின் குற்றம்சாட்டியிருந்தார்.

ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு
இந்த புகாரின் பேரில் போலீஸார் ராக்கி சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராக்கி சாவந்தை கைசு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபாசமாக நடிகை ஷெர்லினின் படத்தை சித்தரித்தது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிலிடம் இருந்து தன்னை பிரிக்க சதி
இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறுகையில் அடிலுடன் இருந்து தன்னை பிரிப்பதற்காக இது போன்றதொரு பொய்யான தகவலை கூறியுள்ளார்கள். மைசூரிலிருந்து யாரோ சிலர் இது போல் செய்வதாக ராக்கி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை ராக்கி சாவந்திற்கும் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோதல் இருந்து வருகிறது.

ஷெர்லின் சோப்ராவுக்கும் ராக்கிக்கும் மோதல்
ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் செய்து வருகிறார்கள். இருவரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம்சாட்டி கொள்கிறார்கள். ராக்கி சாவந்த் தனது மியூசிக் அகாதெமியை திறக்க நேற்று திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கைது செய்யப்பட்டுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட போதிலும் இப்போதுதான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications