இந்தியாவுக்குள் சீனா புகுந்ததை போல.. கர்நாடகாவுக்குள் நாங்கள் ஊடுருவோம்.. சிவசேனா ராவத் எச்சரிக்கை
மும்பை: இந்தியாவுக்குள் சீனா புகுந்ததை போல கர்நாடகாவுக்குள் நாங்கள் ஊடுருவி விடுவோம் என சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா - கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும் நிலையில், சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பெலகாவியை உரிமை கோரும் மகாராஷ்டிரா
கர்நாடக மாநில எல்லையோரத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். மேலும், அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் மராட்டிய மாநில பாரம்பரியத்தையே கடைப்பிடித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
1957-ம்ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரித்த போது, மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில பகுதிகள் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசும், பல மராட்டிய அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இந்த சூழலில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக எல்லையோரம் இருக்கும் சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பயங்கர மோதல் - சஞ்சய் ராவத் ஆவேசம்
இதனால் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்பினர் இடையே அண்மையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு மாநில பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "ஒருகாலத்தில் பாம்பே மாகாணத்தின் கீழ்தான் பெலகாவி உள்ளிட்ட பகுதிகள் இருந்தன. அவை யாவும் நியாயமாக மகாராஷ்டிராவுக்கு சொந்தமானவை ஆகும்.

"சீனாவை போல ஊடுருவுவோம்"
இந்த எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி வருகிறார். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். எங்களை சீண்டி பார்க்காதீர்கள். அப்படி செய்தால், சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் சீனா எப்படி புகுந்ததோ, அதேபோல கர்நாடகாவுக்குள் அதிரடியாக நாங்கள் நுழைவோம். மகாராஷ்டிராவில் தற்போதுள்ள பாஜக கூட்டணி அரசு பலவீனமான அரசாக உள்ளது. கர்நாடகா எல்லை பிரச்சினையில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கக்கூட அது தயங்குகிறது" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications