உலகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா...ஒரே நாளில் 12,29,669 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 12,29,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,61,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 48,95,28,413 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42,43,83,385 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,302 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 61,70,441 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகாலமாக மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் பல நகரங்களில் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 12,29,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 48,95,28,413 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 9,61,399 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 42,43,83,385 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,653 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 61,70,441 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
தென்கொரியா, பிரான்ஸ் ஜெர்மனியில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் ஒரே நாளில் 2,80,187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 360 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 148,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜெர்மனியில் 231,910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 82 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 521,293 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து கொரோனா கால கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று அறிவித்துள்ளன. 180 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications