Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க நடக்குது! தேசிய கீதத்திற்கு பதில் வேற பாடல்? ராகுல் மேடையில் குழப்பம்.. பாஜக நிர்வாகி கேலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடல் ஒலிபரப்பப்படுவதற்கு பதில் வேறு ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டதால் மேடையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, என்ன ராகுல் காந்தி இது? என்ற கேப்ஷனுடன் இதை கிண்டல் செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை கடந்து தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்து வருகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை

பாரத் ஜோடோ யாத்திரை

6 மாநிலங்களில் 28 மாவட்டங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணமாக வந்து தற்போது மகராஷ்டிர மாநிலத்தின் அகோலா மாவட்டத்திற்குள் வந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்திற்குள் வரும் 20 ஆம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைகிறது. தனது பாத யாத்திரைக்கு இடையே கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

மக்கள் விரோத நடவடிக்கைகளை..

மக்கள் விரோத நடவடிக்கைகளை..

மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை கொண்டு இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது உரையில் கடுமையாக விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் கட்சியினர் புத்துணர்ச்சி அடைந்துள்ளதாகவும் தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அமைந்து இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

 தேசிய கீதத்திற்கு பதிலாக

தேசிய கீதத்திற்கு பதிலாக


இதனிடையே, மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தியின் பேச்சு முடிந்த பிறகு நிகழ்ச்சியின் முடிவாக தேசிய கீதம் ஒலிபரப்பப் பட்டது. இதற்காக அனைவரும் எழுந்து நின்று தயாராக இருந்தனர். அப்போது தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலிபரப்பப்பட்டது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. தவறான பாடல் ஓடுவதை கவனித்த ராகுல் காந்தியும் சட்டென்று இது குறித்து அங்கு இருந்தவர்களிடம் கேட்பதை பார்க்க முடிந்தது.

 தவறாக ஒலிபரப்பப்பட்ட பாடல்

தவறாக ஒலிபரப்பப்பட்ட பாடல்

இதையடுத்து தவறாக ஒலிபரப்பப்பட்ட பாடல் நிறுத்தப்பட்டு தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. இதனிடையே, ராகுல் காந்தியின் நிகழ்ச்சியில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களும் இந்த வீடியோவை சுட்டிக்காட்டி ராகுலையும் காங்கிரசையும் விமர்சித்து வந்தனர்.

ராகுல் காந்தி என்னது இது?

ராகுல் காந்தி என்னது இது?

அந்த வகையில், தமிழக பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து, ''ராகுல் காந்தி என்னது இது? என்ற கேப்ஷனையும் போட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு கீழே காங்கிரஸ் - பாஜக ஆதரவாளர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். மனித தவறு இயல்புதான் என்றும் மோடியின் நிகழ்ச்சியில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்கின்றன என்றும் டிவிட்டரில் சிலர் பதிவிட்டு இருக்கின்றனர். அதேபோல், ராகுல் காந்தியை விமர்சித்தும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

தோல்வி பயம் என பாஜக விமர்சிப்பு

தோல்வி பயம் என பாஜக விமர்சிப்பு

இரு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை சென்று வரும் ராகுல் காந்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்றும் தோல்வி பயத்தால் ராகுல் காந்தி பிரசாரத்தை தவிர்ப்பதாகவும் பாஜக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரைக்கு மத்தியில் வரும் 22 ஆம் தேதி குஜராத் செல்லும் ராகுல் காந்தி அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

 குஜராத்தில் கடும் போட்டி

குஜராத்தில் கடும் போட்டி

குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் வியூகம் வகுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மியும் கோதாவில் இறங்கியுள்ளது. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

டிசம்பர் 8 தேர்தல் முடிவுகள்

டிசம்பர் 8 தேர்தல் முடிவுகள்


இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. குஜரத்தில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+