சிக்கும் நடிகைகள்? கிலோ கணக்கில் சிக்கிய மெத்..இண்டர்நேசனல் கும்பலுடன் தவெக நிர்வாகிக்கு கனெக்‌ஷன்?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை அருகே ரூ 270 மதிப்பிலான 135 கிலோ மெத்தப்பெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு 14 நாட்கள் நீதி மன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நாகை தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பூபாலன், சுகன், சதீஷ்குமார் , சுகநாதன், மணிகண்டன் ஆகியோர் விசாரணை முடிந்து நேற்று இரவு வேதாரண்யம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், பூபாலானுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா என விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான DRI திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Methamphetamine

இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஐந்து பேர் கொண்ட DRI அதிகாரிகள் குழுவினர் சுமார் 6 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

சிந்தாமணி கிராமத்தில் தவெக நிர்வாகி பூபாலன், பிராதமராமபுரம் பகுதியில் சுகன் ஆகியோரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், சுகன் இல்லத்தில் 100 கிலோ வரைக்கும் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தகவல் தெரிந்த தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் பூபாலனை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தது தவெக தலைமை.

தொடர்ந்து சிந்தாமணி கிராமத்தில் பூபாலன் வீட்டில் விசாரணை 10 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில், நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. மேலும் பூபாலின் நண்பர்களான சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோரிடம் பிராதபராமபுரத்தில் விசாரணை நீடித்து வரும் நிலையில் மூட்டை மூட்டையாக மெத்தப் பெட்டமின் அங்கிருந்து நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு தஞ்சாவூரில் உள்ள போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லத் திட்டமிட்டனர்.

இதற்கிடையே தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பூபாலன், சுகன், சதீஷ்குமார் , சுகநாதன், மணிகண்டன் ஆகியோர் விசாரணை முடிந்து நேற்று இரவு வேதாரண்யம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தான், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூபாலன் உள்பட 4 பேருக்கும் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் எனவும், இலங்கையில் யாருக்கு போதை பொருள் அனுப்ப பதுக்கி வைத்தனர்.

இதுபோல் வேறு எங்கெல்லாம் போதை பொருளை அனுப்பி உள்ளனர், எத்தனை ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்று விசாரணை நடந்து வருகிறது. மேலும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+