இதய நோயால் பாதிக்கப்பட்ட நாகை எம்.பி. செல்வராசு.. இன்று அதிகாலை காலமானார்!
நாகப்பட்டினம்: நாகை எம்.பி. செல்வராசு இன்று அதிகாலை காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான செல்வராசு (67) உடல்நலக்குறைவால் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்தில் பிரச்சனைகள் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

மே 2ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவர் 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்வானார். நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நான்கு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக இந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. இவருக்கு பதில் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இங்கே களமிறங்கினார். செல்வராஜுக்கு ஆதரவாக செல்வராசு கடந்த மாதம் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஆனால் அதன்பின் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு ஓய்வு எடுக்க சென்றார். அதன்பின் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள முத்துப்பேட்டையில் சித்தமல்லி ஊரை சேர்ந்தவர். இவருக்கு சிறுநீரக தொற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் மூச்சு திணறல் காரணமாக இவர் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலை மோசமாக இருந்தாலும் அதோடு இவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தேர்தலுக்கு பின் உயர் சிகிச்சைக்காக இங்கே இவர் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில் அப்போது உடல்நிலை மோசமானது. இந்த முறை லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வேண்டாம் என்று இவரே மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு கமலாவதனம் என்று மனைவியும், செல்வபிரியா, தர்ஷினி என்ற மகள்கள் உள்ளனர். செல்வபிரியாவிற்கு கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடந்தது. செல்வராசு உடல் இன்று சித்தமல்லி கொண்டு சென்று அங்கே அடக்கம் செய்யப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications