நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
நாகை: உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும் என்றும், அதற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
Recommended Video
நாகையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் மீன்வள பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 12 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், 240 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்களும், 55 மாணவர்களுக்கு இளநிலை தொழில்நுட்ப பட்டங்களும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். பின்னர் பட்டங்களை பெற்ற மாணவர்கள் ஆளுநர் வாசிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் இந்திய மாணவர்களும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்த 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள் யோசிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது உள்ள உலகத்திற்கு வித்தியாசமாக தான் தேவைப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.