நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆபாசம்".. கிளாஸ் நடத்தும் போதே அத்துமீறிய ஆசிரியர்? பாய்ந்து வந்த புகார்! அப்படி என்ன சொன்னாங்க?

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: சமீபத்தில் வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மாணவிகள் சிலர் ஆபாச கடிதம் எழுதியதை கண்டித்த நிலையில் ஆசிரியர் மீது பழிசுமத்தும் விதத்தில் மாணவிகள் இவ்வாறு கூறியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

9 நாள்.. பெங்களூர் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகள்.. வேளாங்கண்ணியில் தேடும் பணி தீவிரம் 9 நாள்.. பெங்களூர் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகள்.. வேளாங்கண்ணியில் தேடும் பணி தீவிரம்

புகார்

புகார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவ/மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் மாணவ/மாணவியர்களுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 கைது

கைது

புகாரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி பள்ளியின் தலைமையாசிரியர் அறையை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால் இந்த பிரச்னை குறித்து ஆசிரியர்கள் மாற்றுக் கருத்து கூறி வருகின்றனர். மாணவிகள் தவறு செய்ததாகவும், அதனை கண்டித்த காரணத்தால் இதுபோன்ற பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது மாணவிகள் ஆபாச பாடல் எழுதியதாகவும், அதனை கண்டித்த ஆசிரியர் மாணவிகளின் பெற்றோரை அழைத்துவர வற்புறுத்தியதாகவும் இதனை தவிர்க்கவே இது போன்ற பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

 கோரிக்கை மனு

கோரிக்கை மனு

மேலும், புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் ஆசிரியரை கைது செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாணவிகளின் தவறை கண்டித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து வர சொன்ன நிலையில் மாணவிகள் இந்த பிரச்னையை திசை திருப்ப பொய்யான புகாரை அளித்துள்ளனர். மேலும் வெளியிலிருந்து சில கட்சிகளின் தலையீடு காரணமாகவும் இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.

English summary
Recently, a teacher was arrested for teaching obscenity in the classroom. In this case, the teachers union said that some of the students have condemned the writing of obscene letters in a way of blaming the teacher. And the authors also said that the issue has been diverted due to the intervention of political parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X