நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேங்க் செக்யூரிட்டிக்கு செம ஐடியா.. ஏடிஎம் மெஷினில் வேப்பிலை.. கொரோனாவிலிருந்து காக்க நூதன முயற்சி!

Google Oneindia Tamil News

நாமக்கல்: ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தினமும் இயந்திரங்கள் மீது வேப்பிலை வைக்கும் காவலாளியின் செயல் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    இது கொஞ்சம் ஓவர் தான்: ஏ.டி.எம். மையத்தில் வேப்பிலை!

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்தவே மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    ATM security places neem leaf on atm machines to prevent Coronavirus

    கொரோனாவில் இருந்த தப்பிக்கப் பலரும் பல வழிகளில் முயன்று வருகின்றனர். கடந்த ஆண்டே வேப்பிலை, மஞ்சள் என புதுப்புது ஐடியாக்கள் மூலம் கொரோனாவை விரட்டப் பலரும் முயன்றனர். இந்த ஆண்டும் அப்படி கொரோனாவை ஒழிக்க நாமக்கல் எஸ்பிஐ காவலாளி செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் ஊரில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குக் காவலாளியாக பணிபுரிபவர் ஆறுமுகம்.

    இன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்புஇன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

    இவர் ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தினமும் ஏடிஏம் இயந்திரங்கள் மீது வேப்பிலை மற்றும் பூவையும் வைத்து வருகிறார். ஓரிரு நாட்களுடன் நிற்காமல் தினசரி ஏடிஎம் இயந்திரங்கள் மீது வேப்பிலை வைத்து வருகிறார் ஆறுமுகம்.

    வேப்பிலைகள் மூலம் கொரோனா பரவலை நிறுத்த முடியாது என்றாலும்கூட வாடிக்கையாளர்களின் நலனைக் காக்க தன்னால் முடிந்த செயலை செய்யும் காவலாளி ஆறுமுகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது வேப்பிலை ஏடிஎம் புகைப்படங்கள் தான் இணையத்தில் இப்போது வைரல்..!

    English summary
    In Namakkal, ATM security keeps neem leaf on atm machines to protect customers from Coronavirus. neem leaf will not curb the spread of Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X