நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னயவே கடிச்சுட்டியா.. கட்டுவிரியன் பாம்பை வைத்து விவசாயி செய்த வேற லெவல் சம்பவம்

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது தன்னைக் கடித்த கட்டு விரியன் பாம்பை தேடி கண்டுபிடித்து அதனை உயிரோடு பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்த விவசாயி பாம்பை கையோடு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    என்னயவே கடிச்சுட்டியா.. கட்டுவிரியன் பாம்பை வைத்து விவசாயி செய்த வேற லெவல் சம்பவம்

    தமிழகத்தில் தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது இதன் காரணமாக வனப்பகுதிகளில் இருக்கும் பாம்பு உள்ளிட்ட பிராணிகள் கதகதப்பை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. 2 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு! ஓமிக்ரான் பாதிப்பும் உயர்வு இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. 2 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு! ஓமிக்ரான் பாதிப்பும் உயர்வு

    தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்குள் புகும் பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடிப்பதும் அதனை வனத்துறையிடம் ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் அருகே விவசாய வேலை செய்த விவசாயி ஒருவரை கடித்த பாம்பை விவசாயி பிடித்து அதோடு சேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    நாமக்கல் விவசாயி

    நாமக்கல் விவசாயி

    நாமக்கல் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு உள்ளார். தினமும் வயலில் வேலை செய்துவிட்டு மதியம் உணவுக்காக வீடு திரும்புவது ராஜாவின் வழக்கம் இந்த நிலையில் வழக்கம் போல் இன்று ராஜா தனது நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    காட்டு விரியன் பாம்பு

    காட்டு விரியன் பாம்பு

    அப்போது அவரது காலில் திடீரென வலி ஏற்பட்ட நிலையில் பார்த்தபோது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கண்டித்து விட்டு செல்வது தெரியவந்தது. பொதுவாக கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் கடிக்கும்போது பதற்றமடைந்து நாம் போடவோ அல்லது பயம் ஏற்பட்டால் விஷமானது ரத்த ஓட்டம் அதிகமாகி அதன் காரணமாக உடல் முழுவதும் பரவி குறைந்த நேரத்திலேயே மரணம் ஏற்படுவது வழக்கம். ஆனால் பாம்பு கடித்தும் சற்று அசராத விவசாயியான ராஜா அந்த பாம்பை துரத்திச் சென்று அதனை உயிருடன் பிடித்துள்ளார்.

    பாம்பால் பரபரப்பு

    பாம்பால் பரபரப்பு

    மேலும் பாம்பைப் பிடித்து அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்த ராஜா இது குறித்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இளையராஜாவை மீட்ட உறவினர்கள் வாகனம் ஒன்றின் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போதும் ராஜா தான் பிடித்திருந்த கட்டு விரியன் பாம்பை கையிலேயே வைத்திருந்தார் இதனால் அதிர்ச்சியடைந்த சக நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அச்சத்திற்கு ஆளாகி திடீரெனக் கிளம்பி விட்டால் என்ன செய்வது என்பது போல அவர்கள் பரபரப்பில் மூழ்கினர்.

    மருத்துவமனையில் சிகிச்சை

    மருத்துவமனையில் சிகிச்சை

    தற்போது அந்தப் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் பிடிப்பட்ட ந்த பாம்பு கொடிய விஷம் வாய்ந்தது எனவும் உரிய நேரத்தில் ராஜா அந்த பாம்பை பிடிக்காமல் இருந்திருந்தாலோ அல்லது பதற்றம் அடைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ள மருத்துவர்கள் தற்போது அவர் சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளதாக கூறியுள்ளனர் தன்னைக் கடித்த பாம்பை விடாமல் அதனை உயிருடன் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து கையோடு மருத்துவமனைக்கே விவசாயி கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    The incident has caused a stir as a farmer who found a snake that had bitten him while doing farm work near Namakkal, caught it alive and stuffed it in a plastic bottle and brought it to the hospital with his hand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X