கன்டெய்னர் லாரியை கண்டமேனிக்கு இயக்கிய பல்வால் கொள்ளையர்கள்! எதிரே வந்த காரை துவம்சம் செய்த கொடூரம்
நாமக்கல்: கேரளாவில் 3 ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடத்திவிட்டு தமிழகத்திற்கு தப்பி வந்த போது செக்போஸ்ட்டில் நிற்காததால் போலீஸார் துரத்தினர். இதை அறிந்த கொள்ளையர்கள் தாங்கள் வந்த கன்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டி, வாகனங்கள் மீது மோதிய போதிலும் நிற்காமல் சென்ற காட்சி பதைபதைக்கிறது.
அதிலும் வெப்படை அருகே யூடர்ன் போடும் போது ஒரு நபரை இடித்ததால் அவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரின் புறநகர் பகுதியில் 3 எஸ்பிஐ ஏடிஎம்களில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்தது. கண்காணிப்பு கேமராவில் பதியக் கூடாது என்பதற்காக சிசிடிவியில் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஸ்பிரே அடித்தார்.
இதையடுத்து ஏடிஎம் இயந்திரங்களில் கேஸ் கட்டரால் வெட்டிய கும்பல் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தது. மொத்தம் 3 ஏடிஎம்களில் ரூ 68 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பணத்துடன் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து கேரள போலீஸாரின் விசாரணையில் அவர்கள் தமிழகத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தமிழக போலீஸாருக்கு கேரள போலீஸார் தகவலை கொடுத்து உஷார்படுத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒரு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் சென்றது.
அப்போது பொதுமக்களின் வாகனங்களையும் இடித்துத் தள்ளிவிட்டு சென்றதால் அவர்களுக்கு சந்தேகம் வந்தனர். இதனிடையே போலீஸாரும் அந்த லாரியை துரத்திக் கொண்டே வந்தனர். இந்த நிலையில் வெப்படை என்ற இடத்தில் போலீஸார் கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியில் இருந்தவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து லாரியின் முன் பகுதியில் இருந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில், ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்த இர்பான் சக்கூர்(32), புலானா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்ரம் (42), பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த முபாரக் (25), பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த சவுக்கீன் (26), ஷபீர்கான் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அந்த கன்டெய்னர் பொதுமக்கள் மீத மோதும் அளவுக்கு தாறுமாறாக ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் போலீஸார் செக்போஸ்ட்டில் நிறுத்திய போது நிற்காமல் சென்ற நிலையில் அவர்களை போலீஸார் துரத்தி கொண்டு வந்தனர்.
இதனால் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டினர். ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே நின்றிருந்த ஒருவரை ஒரு இன்ச் அளவில் மோதியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிறகு யூடர்ன் போடும் போது எதிரே இருந்த காரையும் வளைத்து யூடர்ன் போட்டனர்.
அப்போது அவர்களை வழிமறித்த ஒரு நபர் மீது வண்டியை ஏற்ற முயன்றதால் அவர் கீழே விழுந்தார். இப்படியாக போலீஸிடம் இருந்து தப்பிக்க இந்த கொள்ளையர்கள் சைக்கோ போல் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளுக்கு ஈரக்குலையே நடுங்குவதாக அமைந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications