"உறவு".. 13 வயது சிறுவன் தந்தையானான்.. 31 வயது பெண்ணின் வக்கிரமம்.. விக்கித்த மக்கள்.. என்ன நடந்தது
14 வயது சிறுவன் தந்தையான விவகாரத்தில் 31 வயது பெண் தண்டனையில் இருந்து தப்பி உள்ளார்
நியூயார்க்: பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், பாலியல் கல்வி அவசியம் பள்ளிகளில் புகட்டப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளிலேயே பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுவது மலிந்து வருகிறது.. குறிப்பாக வல்லரசுகளில் இதுபோன்ற செயல்கள் அதிகம் நடந்து வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகின்றன.
பாலியல் கல்வியின் உண்மையான நோக்கம், உடலுறவுகளால் வரும் அவசியமற்ற, விரும்பாத கருத்தரிப்புக்களைத் தவிர்ப்பதும், தவறான விளைவுகளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் காப்பதும்தான்.
ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக்கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும் என்பதே உண்மை. 2 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு பாலியல் வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

டியூஷன் டீச்சர்
அந்த டீச்சரின் பெயர் எல்லாரியா சில்வா. லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி என்ற ஊரை சேர்ந்தவர், இவர் தன்னுடைய வீட்டிலேயே டியூஷன் நடத்தி வந்துள்ளார்.. இவரிடம் படிக்கும் 15 வயது சிறுவனிடம் செக்ஸ் உறவு வைத்துள்ளார் இந்த டீச்சர். அதுவும் 8, 9 முறை வைத்திருக்கிறார்.. இதில், என்ன கொடுமை என்றால், இந்த சிறுவனுடன் சில்வா உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்த டீச்சரின் மகனும் கூட அதே வீட்டிலேயே இருந்துள்ளான். இந்த விவகாரம் முதலில் போலீசுக்கு போனது.. ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், கோர்ட்டுக்கு விவகாரம் சென்றது. இதற்கு பிறகு போலீஸார் சுதாரித்துவிட்டனர்..

அரங்கேற்றம்
விசாரணைக்காக தானாக முன்வந்து ஆஜரானார் சில்வா.. விசாரணையும் நடத்தப்பட்டது. செய்த தவறை ஒப்புக் கொண்டார் சில்வா... கோர்ட் வாசல்வரை ஒரு ஆசிரியை சென்றுவந்தும்கூட, பள்ளி நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததாககூட சொல்லப்பட்டது. ஆனால், இந்த டீச்சரின் வாக்குமூலம், அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. "கோடை காலத்தின்தான் என்னுடைய வக்கிரங்களை அரங்கேற்றினேன். டியூஷனில் சேர்ந்ததுமே அந்த சிறுவனுக்கு குறி வைத்துவிட்டேன். என்னுடைய நிர்வாணப் படங்களை சிறுவனுக்கு அனுப்பிவைத்தேன். பிறகு நிர்வாண வீடியோக்களை அனுப்பினேன். அதில் நானே நிர்வாணமாக தோன்றினேன். ஆனால் முகத்தை மட்டும் மறைத்து சிறுவனுக்கு வீடியோவை அனுப்பினேன்.

அவசரம் அவசரம்
இதைப் பார்த்ததுமே அந்த சிறுவன் உணர்ச்சிவசப்பட்டான். அதன்பிறகு, மெல்ல மெல்லபேசி சிறுவன் மனதை கரைத்தேன். ஒருகட்டத்தில், போதைப் பொருளையும் அவனுக்கே தெரியாமல் தந்துவந்தேன். ஒரு கட்டத்தில் இந்த உறவை எல்லோருக்கும் தெரிவித்து விடலாமா? என்று சிறுவன் என்னிடம் யதார்த்தமாக கேட்டான். பதறிப்போன நான், "இருப்பா, அவசரப்படாதப்பா.. படிப்பு கெட்டுப் போய்ரும்" என்று தடுத்தேன். எப்படியோ விஷயம் கசிந்து, போலீஸ், கோர்ட், ஜெயில் வரை வந்துவிட்டது" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு அமெரிக்காவில் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மீடியாக்களும் இதை தொடர்ந்து ஒளிபரப்பி, பரபரப்பை கிளப்பின.

உடல் உறவு
கடந்த 2 மாதம் முன்புகூட ஒரு சம்பவம் இதே அமெரிக்காவில் நடந்தது. மிசோரி மாகாணத்தில் நிக்சா உயர்நிலை பள்ளியில் அந்த டீச்சர் பணிபுரிகிறார்.. 26 வயதாகிறது.. அவரது பெயர் லீனா ஸ்டீவர்ட்.. தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவனுடன் உறவு வைத்திருந்தார்.. டீச்சரின் எண்ணத்தை அறிந்த அந்த மாணவன் முதலில் அதிர்ந்து போயுள்ளான்.. ஆனால், தன்னிடம் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால், பரீட்சையில் மார்க் போட மாட்டேன், ஃபெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டினாராம்.

ஜாஸ்தி மார்க்
இதற்கு பிறகு, அந்த சிறுவனுடன் உறவு வைத்தபிறகு, அந்த மாதம் நடந்த தேர்வில், அதிக மதிப்பெண்களை அள்ளி வழங்கியுள்ளார் டீச்சர்.. ஆனாலும் அந்த மாணவனுக்கு உறுத்தல் அதிகமாகிவிட்டது.. கடினமாக படித்தும் கிடைக்காத மதிப்பெண், இப்படி ஒரு கேவலமான விஷயம் மூலம் கிடைப்பதை அவன் விரும்பவில்லை.. அதனால் நேரடியாகவே போலீசுக்கு போய்விட்டான்.. 16 வயதுடைய மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆசிரியர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..!!

உடலுறவு
இதோ இப்போதும் ஒரு சம்பவம் அதே அமெரிக்காவில் நடந்துள்ளது.. கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரானோ என்ற பெண். 31 வயது ஆகிறது.. இந்த பெண் 13 வயது சிறுவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் சிறுவனுடன் நெருக்கம் அதிகமானது.. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் ஆண்ட்ரியா உடலுறவு கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.. இதனால், பாதிக்கப்பட்ட சிறுவன், கொலராடோ போலீசில் புகார் தந்துள்ளான்.. போலீசாரும், ஆண்ட்ரியாவை கைது செய்து விசாரித்தனர்.. ஆண்ட்ரியா உடனே இதற்காக ஒரு வக்கீலை நியமித்து, வழக்கை எதிர்கொள்ள துவங்கினார்.

கலையாத கர்ப்பம்
அந்த நேரத்தில்தான், எதிர்பாராவிதமாக ஆண்ட்ரியா கர்ப்பம் அடைந்தார்.. பிறகு ஆண்ட்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 14 வயதான அந்த சிறுவன், தந்தையாகி விட்டான். இறுதியில் ஆண்ட்ரியா, குற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.. ஒருவேளை, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆண்ட்ரியாவுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.. ஆனால், இப்போது, அந்த பெண் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால், எந்தவித தண்டனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளாராம். இதற்கான தீர்ப்பு வரும் மே மாதம் வழங்கப்பட உள்ளதாம்.

தலைகீழ் பாலினம்
இதையெல்லாம் கேட்டு, அந்த சிறுவனின் அம்மா அதிர்ந்துபோயுள்ளார்.. இதுகுறித்த அந்த தாய் சொல்லும்போது, "என் மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டுவிட்டதுபோல் உணர்கிறேன்... இப்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே வாழப் போகிறான்.. என் மகனுக்கு அநீதி நிகழ்ந்து விட்டது. ஒருவேளை இந்த வழக்கில், பாலினம் தலைகீழாக மாறிவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.. ஆண்ட்ரியா ஒரு ஆணாகவோ அல்லது சிறுமியாகவோ இருந்திருந்தால், அது நிச்சயமாக அவருக்கு வலியை தந்திருக்கும்.. ஆனால், ஆண்ட்ரியா பெண் என்பதால் அவர் மீது எல்லாரும் இரக்கம் காட்டுகிறார்கள்" என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications