டிரம்பிற்கு குட்பை.. அமெரிக்காவை ஓரம்கட்டும் நேட்டோ நாடுகள்.. களமிறக்கப்படும் போர் விமானங்கள்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே பிரச்சனை முற்றி உள்ளது. இதனால் அமெரிக்காவின் எஃ35 ரக போர் விமானங்களை வாங்குவதை நேட்டோ நாடுகள் மறுபரிசீலனை செய்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பெருத்த அடியை கொடுக்க உள்ள நிலையில் நேட்டோ நாடுகள் எந்த நாடுகளின் போர் விமானங்களை வாங்க உள்ளனர்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. இந்த நேட்டோவில் 32 நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகள் உள்ளன. மொத்தமுள்ள 32 நாடுகளில் 30 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. 2 நாடுகள் மட்டுமே அமெரிக்க கண்டத்தில் உள்ளது.

இந்த நேட்டோவுக்கு என்று தனியாக ராணுவ படைகள் உள்ளன. இதில் நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் மீது போர், தாக்குதல் நடத்தும்போது இந்த நேட்டோ படைகள் களமிறங்கி பதிலடி கொடுக்கும். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேட்டோவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேட்டோவுக்கு அமெரிக்கா தான் அதிக நிதி பங்களிப்பு செய்கிறது. இதனால் இது நேட்டோவில் உள்ள பிற நாடுகளுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் நேட்டோ நாடுகள், நட்பு நாடுகள் என்று பாராமல் தொடர்ந்து அதிக வரிகளை விதித்து வருகிறார். வரும் காலத்திலும் வரிகளை விதிக்க தயாராகி வருகிறார். இதனால் நேட்டோவில் உள்ள நாடுகள் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளன. தற்போது நேட்டோவில் அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, ஸ்வீடன், ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஸ்லோவேகியா, ரோமானியா, போர்ச்சுக்கல், போலந்து, நார்வோ, வடக்கு மசிடோனியா, நெதர்லாந்து, மொன்டென்னிரோ, லக்சம்பர்க், லிதுவேனியா, லடிவா, இத்தாலி, ஐஸ்லாந்து, ஹங்கேரி, கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, எஸ்டோனியா, டென்மார்க் செக் குடியரசு, குரோஷியா, கனடா, பல்கேரியா, பெல்ஜியம், அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
எஃப் 35 விமானத்துக்கு மாற்று
அமெரிக்கா விலகும் பட்சத்தில் பிற நாடுகள் நேட்டோ படையை செயல்பாட்டில் வைக்க முடிவு செய்துள்ளன. அதோடு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க அந்த நாட்டின் எஃப் 35 ரக போர் விமானங்களின் டீலை மறுபரிசீலனை செய்ய நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன. தற்போது நேட்டோவில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. மேலும் தங்களின் பழைய விமானங்களுக்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து புதிய எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்கி வருகின்றன.
அந்த வகையில் நேட்டோவில் உள்ள கனடா, போச்சுக்கல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களின் பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிதாக அமெரிக்காவின் எஃப் 35 ரக விமானங்கள் வாங்கி முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தற்போது மறுபரிசீலனை செய்ய தொடங்கி உள்ளன. இந்த 3 நேட்டோ நாடுகள் எப்ஃ35 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதை நிறுத்தும் பட்சத்தில் பிற நேட்டோ நாடுகளும் இதனை கையில் எடுக்கலாம். அது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கும், அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பிரச்சனை வரலாம். அமெரிக்காவுக்கான வருமானம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஐரோப்பிய நாட்டு விமானங்கள்
இதற்கு பதிலாக இந்த 3 நாடுகளும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பு விமானங்களை வாங்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் சாப் கிரிபன், யூரோ பைட்டர் டைபூன், தசால்ட் ரபேல் உள்ளிட்ட விமானங்களை வாங்கி பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்களின் அளவுக்கு துல்லியமாகவும், அதி விரைவாகவும் செயல்பட முடியாது. இருப்பினும் அமெரிக்காவை நம்பி இருப்பதை விட இந்த விமானங்களை வாங்கி பயன்படுத்தும் முடிவுக்கு நேட்டோ நாடுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாப் போர் விமானங்கள்
அதாவது எஃப் 35 ரக போர் விமானம் என்பது 5ம் தலைமுறையை சேர்ந்தது. ரேடாரில் சிக்காமல் எந்த காலநிலையிலும் எதிரி நாட்டுக்குள் பறந்து துல்லியமாக அதனால் தாக்க முடியும். ஆனால் சாப் கிரிபன் விமானம் என்பது ஸ்வீட்சர்லாந்து நாட்டின் தயாரிப்பாகும். சாப் கிரிபன் என்பது 4ம் தலைமுறை விமானம். இதில் 2 வகைகள் உள்ளன. ஒன்று சாப் 35 டிராகன், இன்னொன்று சாப் 37 Viggen. இந்த 2 விமானங்களையும் தற்போது இந்த விமானங்களை ஸ்வீடன், செக்குடியரசு, ஹங்கேரி, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
யூரோ பைட்டர் டைபூன்
அதேபோல் யூரோ பைட்டர் டைபூன் போர் விமானம் என்பது யூரோ பைட்டர் டைபூன் விமானம் ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டனின் கூட்டு தயாரிப்பாகும். ஏர்பஸ், பிஏஇ சிஸ்டம்ஸ் மற்றும் லியோநார்டோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானங்கள் பிரிட்டன், ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
ரபேல் போர் விமானங்கள்
மேலும் தசால்ட் ரபேல் விமானங்கள் என்பது 4.5ம் தலைமுறையை சேர்ந்தது. ரபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பாகும். இந்த விமானத்தை நம் நாடு பயன்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி எகிப்து, கத்தார், கிரீஸ், குரேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இருப்பினும் இந்த விமானங்கள் அனைத்தும் எஃப் 35 ரக போர் விமானங்களை ஒப்பிடும்போது சற்று குறைவான திறன்களை கொண்டது.
விலை குறைவு
ஆனாலும் கூட இந்த மாற்று விமானங்களை வாங்கும்போது கனடா, போர்ச்சுக்கல், ஜெர்மனியின் போர் விமானங்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக உயரும். ஏனென்றால் எஃப் 35 ரக போர் விமானங்களில் 3 வகைகள் உள்ளன. இதில் ஒரு விமானத்தின் குறைந்தபட்ச விலை என்பது ரூ.694 கோடி முதல் ரூ.998 கோடியாக உள்ளது. அதேவேளையில் யூரோ பைட்டர் டைபூன், ரபேல், சாப் வகையை சேர்ந்த போர் விமானங்களின் விலை என்பது பெருமளவு குறைவாகும். இதனால் கூடுதல் விமானங்களை கனடா, போர்ச்சுக்கல், ஜெர்மனி நாடுகளால் வாங்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications