போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடன்.. டொனால்ட் டிரம்ப்தான் அடுத்த அமெரிக்க அதிபர்.. பரபரப்பு கணிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார். விரைவில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தனது முடிவு தொடர்பாக விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

us trump world

மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்த உடனேயே, அவரது உடல்நிலை காரணமாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும் என்று பிரஷர் வைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், மைக் ஜான்சன் சமூக ஊடக தளமான X இல், ஜனாதிபதி பைடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக இருந்தால், அவர் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கும் அவர் தகுதி இல்லாதவர்.. உடனே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பைடன் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் வரை அதிபராக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார். விரைவில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தொடர்பாக அந்நாட்டு approval ratingல் ,

டிரம்ப் வெற்றிபெற: 65% வாய்ப்பு
கமலா ஹாரி : 31% வெற்றி வாய்ப்பு
மற்ற ஜனநாயக கட்சியினர் ஒருவேளை களமிறக்கப்பட்டால்: 4% வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தல் எப்படி நடக்கும்: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக எலக்டர்ஸ் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். மொத்தமா 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும்.

உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களே பெரும்பாலும் வெற்றிபெறுவார்கள். அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அந்த வேட்பளாருக்கே வழங்கப்படும். ஆனால் சில சமயம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர் கூட எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

அதாவது ஒரு வேட்பாளருக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்து இருந்தாலும் கூட, கூடுதல் எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வேறு வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் இப்படி குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று, அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார். இப்போது பிடன் தேர்தலில் இருந்து விலகி உள்ள நிலையில் டிரம்பிற்கு சாதகமான சூழ்நிலை கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+