புதிய சாதனை.. கோடிக்கணக்கில் செலவழித்து 18 வயசு இளைஞராக மாறும் அமெரிக்க தொழிலதிபர்!
அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கில் செலவழித்து தன் வயதைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நியூயார்க்: தனது வயதைக் குறைத்து 18 வயது இளைஞராக மாறுவதற்குரிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவர். அதற்காக ஆண்டுக்கு அவர் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'என்றும் 16'.. மனிதர்கள் எல்லோருக்குமே இருக்கும் பொதுவான விருப்பம் இதுதான். வயதாவதை யாருமே விரும்புவதில்லை. எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரது கனவு. இதற்காக பலர் எந்த மாதிரியான முயற்சிகளையும் எடுக்கத் தயங்குவதில்லை.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த பிரையன் ஜான்சன் என்ற 45 வயது தொழிலதிபர்.

தொழில்நுட்ப வளர்ச்சி
அமெரிக்காவை சேர்ந்த பையோடெக் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் ஜான்சனுக்கு, மீண்டும் தனது 18 வயதிற்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கனவு, லட்சியம் எல்லாமே. தோற்றத்தில் மட்டுமல்ல.. உடலின் உள் உறுப்புகளிலும் மீண்டும் இளமையைக் கொண்டு வருவதுதான் இவரது ஆசை. நவீன மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியால் இதனை சாத்தியப்படுத்த ஆசைப் படுகிறார் பிரையன்.

மருத்துவக் குழு
இதற்கான வேலைகளை கடந்த ஆண்டே அவர் ஆரம்பித்து விட்டார். அதற்காக 'ப்ளூபிரிண்ட் ப்ராஜெக்ட்' (Project Blueprint) எனும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரையன். 30 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவுடன் இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மீளுருவாக்கம் செய்யும் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற 29 வயதான மருத்துவர் ஆலிவர் சோல்மேன் இந்தக் குழுவிற்கு தலைமை வகித்து வருகிறார்.

உலக சாதனை
இந்த குழுவினர் அவரது உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஜான்சனின் ஒவ்வொரு உறுப்புகளையும் இளமையாக்க முயற்சித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட பயிற்சியின் விளைவாக, பிரையன் தனது உடலின் வயதை 5.1 ஆண்டுகள் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரையனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடவே, இது ஒரு உலக சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் கட்டுப்பாடுகள்
இந்த திட்டத்தின்படி, மருத்துவத்தைத் தாண்டி பிரையனுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சியிலும் முக்கியமான கட்டுப்பாடுகளை இந்தக் குழு வகுத்துள்ளது. அதன்படி, தினமும் காலை 5 மணிக்கு எழும் பிரையன், இரவும் குறிப்பிட்ட நேரத்திற்குக் கட்டாயம் உறங்கச் செல்ல வேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடு. அதேபோல், ஒரு நாளைக்கு சரியாக 1,977 சைவ கலோரிகளை உட்கொள்ள வேண்டும், அதோடு தீவிரமான உடற்பயிற்சிகளையும் அவர் மேற்கொள்ள வேண்டும்.

செலவு
இப்படித் தொடர்ந்து செய்து வரும் பிரையனின் உடல் எடை, உடல் நிறை குறியீட்டெண், குளுக்கோஸ் அளவு, இதய துடிப்பு மாறுபாடுகள் மற்றும் வெப்பநிலையை அவரது மருத்துவக்குழு தினசரி கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இந்தத் திட்டத்திற்காக மில்லியன் கணக்கில் செலழித்து வரும் பிரையன், இந்த ஆண்டு தன்னை மேலும் இளமையாக்க 2 மில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளார்

இளமையாகும் உறுப்புகள்
இந்த இரண்டு ஆண்டுகள் சோதனை முயற்சி மூலம், பிரையன் 37 வயது இளைஞனின் இதயத்தையும், 28 வயது இளைஞனின் தோலையும், 18 வயது இளைஞனின் நுரையீரல் திறனையும், உடற்தகுதியையும் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முயற்சியை தொடர்ந்து செய்து தனது மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், பற்கள், தோல், முடி, ஆண்குறி மற்றும் மலக்குடல் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளையும், அவை 18 வயதின்போது செயல்படுவதைப் போலவே மாற்ற வேண்டும் என்பதே பிரையனின் குறிக்கோள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications