நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விண்வெளி செல்லும் பெஸோஸ்.. ப்ளூ ஆர்ஜின் டீமில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண்.. சுவாரசிய பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இன்று விண்வெளிக்கு செல்லும் ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் குழுவில் இந்திய பெண் சஞ்சல் காவன்தே முக்கிய பங்கு வகித்துள்ளார். ப்ளூ ஆர்ஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை வடிவமைத்ததில் சஞ்சல் காவன்தே முக்கிய பணிகளை செய்துள்ளார்.

Recommended Video

    Pilot கிடையாது எல்லாமே Automatic தான்.. Jeff Bezos-ன் விண்வெளி பயணத்தின் முழு விவரம்

    அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு விண்ணுக்கு செல்ல இருக்கிறார். ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் தி நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட் மூலம்தான் பெஸோஸ் குழுவினர் விண்வெளிக்கு செல்கிறார்கள். தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் முன் பக்கம் கேப்ஸ்யூல் போன்ற பகுதிக்கு உள்ளேதான் ஜெப் பெஸோஸ் குழு இருக்கும்.

    பாகிஸ்தானில்.. ஆப்கன் தூதரின் மகள் கடத்தல்.. 7 மணி நேரம் கடும் சித்ரவதை.. கொடுமை.. பகீர் தகவல்! பாகிஸ்தானில்.. ஆப்கன் தூதரின் மகள் கடத்தல்.. 7 மணி நேரம் கடும் சித்ரவதை.. கொடுமை.. பகீர் தகவல்!

    பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை இவர்கள் செல்வார்கள். அதன்பின் சில நிமிடம் விண்வெளியில் மிதந்துவிட்டு பின்னர் பூமிக்கு திரும்பி வருவார்கள்.

    நியூ ஷெப்பர்ட்

    நியூ ஷெப்பர்ட்

    இந்த கேப்ஸ்யூலை பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கொண்டு செல்லும். அதன்பின் இந்த ராக்கெட் தனியாக கழன்று பூமிக்கு திரும்பிவிடும். பின்னர் விண்வெளிக்கு செல்லும் கேப்ஸ்யூல் சில நிமிடங்கள் விண்ணில் மிதந்துவிட்டு பாராசூட் உதவியுடன் பூமிக்கு திரும்பி வரும். இதன் மொத்த பயண காலம் 10 நிமிடம் ஆகும்.

    யார்

    யார்

    ஜெப் பெஸோசுடன் 82 வயது நிரம்பிய முன்னாள் பெண் விமானியான வாலி பங்க் விண்ணுக்கு செல்கிறார். ஜெப்பின் சகோதரர் மார்க்கும் இதில் விண்ணுக்கு செல்ல இருக்கிறார். அதேபோல் ஆலிவர் தியாமென் என்று 18 வயது இளம் நபரும் இதில் பயணிக்க உள்ளார். ஜெப் பெஸோஸ் விண்ணுக்கு பறக்கும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை உருவாக்கியதில் மகாராஷ்டிராவை சேர்ந்த 30 வயதான சஞ்சல் காவன்தே முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கனவு

    கனவு

    இந்த நியூ ஷெப்பர்ட் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ் டூரிசம் கனவிற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட் ஆகும். விண்ணுக்கு மனிதர்களை கேபியுலில் அனுப்பிவிட்டு மீண்டும் திரும்பி வரும் திறன் கொண்டது. விண்ணுக்கு சென்றுவிட்டு எந்த சேதாரமும் இன்றி இது திரும்பி வரும். இதனால் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை எரிபொருள் நிரப்பி மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

    எப்படி

    எப்படி

    இது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக்காக இயங்க கூடிய ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் சஞ்சல் காவன்தே மிக முக்கிய பங்கு வகுத்தார். மகாராஷ்டிராவில் பிறந்த சஞ்சல் காவன்தே மும்பை பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் அப்பா அசோக் காவன்தே கல்யாண் பகுதியில் முனிசிபல் அலுவலகராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மும்பையில் படிப்பை முடித்த சஞ்சல் காவன்தே அதன்பின் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்கு சென்றார்.

     அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலையில் மெக்கானிக்கல் துறையில் மேல்படிப்பு படித்தவர். பின்னர் மெர்குரி மரைன், டொயோட்டோ உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அதன்பின் விமானியாக பயிற்சி எடுத்துக்கொண்டு லைசன்ஸ் பெற்றபின் 2016ல் நாசாவில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளார். ஆனால் குடியுரிமை காரணமாக நாசாவில் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    பெண்

    பெண்

    இதையடுத்து ப்ளூ ஆர்ஜினில் வேலைக்கு சேர்ந்தவர், அங்கு தற்போது சிஸ்டம் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். தற்போது விண்ணுக்கு பறக்கும் நியூஷெப்பர்ட் ராக்கெட்டின் தயாரிப்பில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள சஞ்சல் காவன்தே, சிறு வயதில் இருந்தே விண்வெளி துறையில் பணியாற்ற எனக்கு விருப்பம்.

    பேட்டி

    பேட்டி

    நான் மெக்கானிக்கல் எடுத்த போது என்னிடம் ஏன் இந்த துறையை எடுத்தாய் என்று பலரும் கேட்டனர். ஆனால் தற்போது இதுவே எனக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ப்ளூ ஆர்ஜின் குழுவில் பணியாற்றுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியை, பெருமையை கொடுக்கிறது என்று சஞ்சல் காவன்தே தெரிவித்துள்ளார்.

    இந்தியர்

    இந்தியர்

    கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்தது. விர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றுவிட்டு திரும்பினார். இதில் இந்தியாவை சேர்ந்த ஆந்திர பெண் ஸ்ரீஷா பண்ட்லா இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Blue Origin: Meet Indian women Sanjal Gavande who worked in Jeff Bezos New Shephard team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X