நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா?

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அமெரிக்காவின் போஸ்டன் நகரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 'சிலந்தி வலை' போல் விளக்கொளியில் காட்சியளிக்கும் அமெரிக்க நகரம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்படும் இது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Boston looks like spider web in Nasas latest photo

அந்த வகையில் தற்போது நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் விளக்கொளிகளால் பிரகாசமாக காட்சியளிக்கிறது ஒரு நகரம்.

அந்த விளக்கொளிகள் பார்ப்பதற்கு சிலந்தி வலை போல் காட்சியளிக்கிறது. "இது ஒரு மேலோங்கிய உணர்வு. ஒரு சிலந்தி வலையின் நுட்பமான இழைகளைப் போலவே, போஸ்டன் நகரத்தின் ஒளிரும் விளக்குகள் காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து 263 மைல் உயரத்தில் இருந்து இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது", என நாசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

நாசா வெளியிட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள போஸ்டன் நகரின் பறவைப் பார்வை புகைப்படமாகும். நாசா குறிப்பிட்டுள்ளது போல் உண்மையில் ஒரு சிலந்தி வலையின் நுட்பமான இழைகளைப் போல தான் படர்ந்து இருக்கிறது போஸ்டன்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போஸ்டன் நகரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படம் சுமார் 8 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது. இந்த அதிசய காட்சியை பதிவிட்ட நாசாவுக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

English summary
In a recent post from Nasa, the image taken by its Internastional space station the American city of Boston in Massachusetts looks like a spider web.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X