நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிவர்ஸ் இன்ஜினியரிங்.. அமெரிக்காவிற்கு எதிராக சீனா, தாலிபான் எடுத்த அஸ்திரம்- பகீர் கிளப்பிய டிரம்ப்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்பங்களை சீனாவும், ரஷ்யாவும் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற அவகாசம் இருந்த போதிலும் கடைசி கட்டத்தில் போதிய திட்டம் இன்றி அவசர அவசரமாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதனால் பெரும்பாலான அமெரிக்க ஆயுதங்கள், போர் ஜீப்கள், ராணுவ கருவிகள், துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானிலேயே விடப்பட்டது.

அமெரிக்க படைகள் வாபஸ் வாங்க வாங்க ஒவ்வொரு பகுதியாக தாலிபான்கள் கைப்பற்றியது. இதனால் அமெரிக்க படைகள் விட்டு சென்ற போர் கருவிகள் பலவற்றை தாலிபான்கள் எந்த கவலையும் இன்றி எளிதாக கைப்பற்றியது. பல மில்லியன் தோட்டாக்கள், துப்பாக்கிகளை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் விட்டு செல்ல அது தாலிபான் வசம் சென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

பிளாக் ஹாக் போன்ற போர் ஹெலிகாப்டர்களை கூட தாலிபான்கள் கட்டுப்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தனித்துவமான டெக்னாலஜி கொண்ட சில கருவிகளும் தாலிபான் வசம் சென்றுள்ளது. இன்னும் சில விமானங்களும் தாலிபான் வசம் சென்றது. பொதுவாக வெளிநாடுகளில் போர் முடித்துவிட்டு திரும்பும் போது அனைத்து போர் கருவிகளையும் எடுத்து செல்வதே ஒரு நாட்டின் வழக்கம். இல்லையென்றால் அந்த போர் கருவிகளின் தொழில்நுட்பம் எதிரிகளின் கைகளுக்கு சென்றுவிடும்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

உதாரணமாக அமெரிக்கா பாகிஸ்தானில் பின் லேடனை கொல்ல சென்ற போது அவர்களின் ஒரு பிளாக் ஹாக் ஸ்டெல்த் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் உள்ள தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் அல்லது தீவிரவாதிகள் கைப்பற்ற கூடாது என்று அதில் குண்டுகளை வைத்து முழுவதுமாக வெடிக்க வைத்துவிட்டு அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது (zero dark thirty என்ற ஹாலிவுட் படத்தில் இதை பற்றி விளக்கமாக கூறி இருப்பார்கள்). இப்படித்தான் தங்கள் நாட்டு தொழில்நுடபம் எதிரி நாட்டிடம் கிடைக்காமல் செய்வார்கள்.

பிளாக் ஹாக்

பிளாக் ஹாக்

பின்லேடனை கொன்ற போது அங்கு வெடித்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை சீனா நேரில் சென்று சோதனை செய்து பார்த்ததும் கூட குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பத்தை கைப்பற்ற முடியுமா என்று சோதனை செய்து பார்க்க சீனா நேரில் சென்றது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ராணுவ கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை தாலிபான்களின் உதவியுடன் சீனா, ரஷ்யா கைப்பற்றும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரிவர்ஸ்

ரிவர்ஸ்

இதை ரிவர்ஸ் இன்ஜினியரிங் என்று கூறுவார்கள். அதாவது ஒரு வாகனம் புதிதாக உருவாக்குவது இன்ஜினியரிங். ஆனால் வாகனம் என்றால் என்னவென்ற தெரியாத நபர் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு வாகனத்தை பார்த்து அதன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதை புதிதாக உருவாக்குவது ரிவர்ஸ் இன்ஜினியரிங். இந்த முறையில் அமெரிக்காவின் தனித்துவமான ராணுவ கருவிகள், ஹெலிகாப்டர்களை சீனாவும், ரஷ்யாவும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்யும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 திறமை இல்லை

திறமை இல்லை

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விதம் தவறு. நான் இருந்திருந்தால் இதை வேறு மாதிரி செய்திருப்பேன். திறமையே இல்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை பிடன் வெளியேற்றி உள்ளார். ஆயுதங்களை அங்கேயே போட்டு வந்துள்ளனர். இது எப்படி நியாயம். எந்த அடிப்படையில் ஆயுதங்களை விட்டுவிட்டு வந்தனர்.

எளிமை

எளிமை

இப்போது ரஷ்யாவும், சீனாவும் நம் ஆயுதங்களை, ஹெலிகாப்டர்களை பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கும். அவர்கள் நமது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருப்பார்கள். எப்படி எதை உருவாக்க வேண்டும் என்று கண்டுபிடித்து இருப்பார்கள். எளிதாக இதை உருவாக்கி விடுவார்கள். காப்பி அடிப்பதில் அவர்கள் பெஸ்ட். எளிதாக நம்முடைய ஆயுதங்களை நம்மைவிட சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள், என்று டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

English summary
China and Russia will reverse engineer USA military tech in Afghanistan under Taliban regime says US Ex President Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X