டீல் ஓகேன்னா வாங்க.. வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கியை வெளியேற்றிய டிரம்ப்.. பகீர் சம்பவம்
நியூயார்க்: வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான சண்டைக்கு பின்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாக பாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான ஊடகம் ஆகும் இது. அவர்களின் கூற்றுப்படி ஜெலன்ஸ்கியை "வெளியே போங்க" என்று டிரம்ப் கூறியதாக தெரிகிறது.

மோதலுக்கு என்ன காரணம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு கடந்த வாரம் சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக பல விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில்.. உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம்.
உக்ரைன் கோபம்
இதுவே உக்ரைனை கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி கொடுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இந்த பேச்சுவார்த்தை உக்ரைனை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் பணம் தனது உள்ளோம். அதை திருப்பி கொடுங்கள்.. அதில் பாதிக்கு மேல் நீங்கள் திரும்பி கொடுங்கள், என்று டிரம்ப் உக்ரைனுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
சண்டை
இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.
இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.
இதற்கு பதிலடி தந்த டிரம்ப், அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்
என்றார்.
இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.
டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.
வெளியேறினார்
வெள்ளை மாளிகையில் நடந்த இந்த கடுமையான சண்டைக்கு பின்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாக பாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான ஊடகம் ஆகும் இது. அவர்களின் கூற்றுப்படி ஜெலன்ஸ்கியை "வெளியே போங்க" என்று டிரம்ப் கூறியதாக தெரிகிறது.
அதாவது ஜெலன்ஸ்கி வெளியேற விரும்பவில்லை. அவருக்கு மதிய உணவு சம்பிரதாயப்படி தர வேண்டும். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு அது வழங்கப்படவில்லை. மாறாக நீங்கள் செல்லலாம்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறி டிரம்ப் அவரை வெளியேற்றி உள்ளாராம்,
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications