நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. மற்ற நாடுகளில் தீவிரம்.. உலகம் முழுக்க 119,177 பேர் பாதிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 114,422 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் வேகம் குறைந்துள்ளது .

Recommended Video

    Corona Virus Update: வைரஸை 3 நாளில் விரட்டி அடித்த தமிழகம்..

    சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த புதிய வைரஸ் ஆகும். இதை COVID -19 என்று அழைக்கிறார்கள். இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டது. இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு பல அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும்.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    ஒருவரை பார்த்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்தானா என்று முதலில் சொல்ல முடியாது. இதனால் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசான காய்ச்சலில்தான் இது தொடங்கும். தற்போது தாக்கி வரும் கொரோனா வைரஸ் அப்படிப்பட்ட வைரஸ்தான்.

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.சீனாவில் 80,778 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர் சீனாவில் 3,158 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

    சீனா இல்லை

    சீனா இல்லை

    கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளில் தீவிரம் அடைந்து வருகிறது. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சீனாவில் இந்த வைரஸ் வேகம் குறைந்து வருகிறது. மிக தீவிரமாக சிகிச்சை முறைகள், மருத்துவ நடவடிக்கைகள் மூலம் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மொத்தமாக இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

    எங்கு பரவியது

    எங்கு பரவியது

    முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும்.இந்த வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் உருவானது என்று கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த வைரஸ் எங்கு தோன்றி இருக்கும் என்று தீவிரமாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள்.

    இத்தாலி வேகம்

    இத்தாலி வேகம்

    சீனாவிற்கு அடுத்து இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸை சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தாலிதான் இதில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இத்தாலியில் 10,149 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 631 தாண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நேற்று இன்றே நாளில் அங்கு 168 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரான் எப்படி

    ஈரான் எப்படி

    அடுத்து இன்னொரு பக்கம் அங்கு 60பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் 8,042 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மொத்தம் 291 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு எம்பிக்கள் அடக்கம். ஈரான் இதனால் அங்கு வைரஸை கட்டுப்படுத்த புதிய முறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்து இன்னொரு பக்கம் அங்கு 60பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் 8,042 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மொத்தம் 291 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு எம்பிக்கள் அடக்கம். ஈரான் இதனால் அங்கு வைரஸை கட்டுப்படுத்த புதிய முறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    தென் கொரியாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 7,755 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு கட்டுபாட்டு செயல்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்தவர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார். கேரளாவில் 18 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.

    English summary
    Coronavirus: Epidemic slows down in China, 119117 people affected all over the world so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X