நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிணங்களை புதைக்க இடமில்லை.. பார்க்குகளை கல்லறையாக மாற்ற யோசனை.. நியூயார்க்கில் ஏற்பட்ட மோசமான நிலை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா காரணமாக பலர் பலியாகி வருவதால் அங்கு பிணங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இதனால் பொது பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள்.

Recommended Video

    பிணங்களை புதைக்க பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற அமெரிக்கா முடிவு?

    கொரோனா காரணமாக அமெரிக்கா நாளுக்கு நாள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 551,08 1பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 21668 பேர் பலியாகி உள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.கடந்த 10 நாட்களில் ஒரே நாளில் கொரோனா வேகம் எடுத்துள்ளது.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1112 பேர் பலியாகி உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் உருவெடுத்து உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் எந்த ஒரு நாட்டையும் விட மிக அதிகமாக நியூயார்க் என்ற மாகாணத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நியூயார்க் நிலை

    நியூயார்க் நிலை

    நியூயார்க்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு மக்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் அங்கு இறப்பு எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. அங்கு கொரோனா காரணமாக 188,694 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் அங்கு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்கு 9385 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அங்கு 7,550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.நியூயார்க் நகரில் மக்கள் தொகை வெறும் 90 லட்சம்தான்.

    பெரிய இழப்பு

    பெரிய இழப்பு

    நியூயார்க் உலகிலேயே மிகவும் வளர்ந்த மாகாணம் ஆகும். ஆனால் அங்குதான் இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. உலகிலேயே முன்னணி நகரம் என்று கருதப்பட்ட நியூயார்க் மிக மோசமான இழப்புகளை சந்திக்க தொடங்கி உள்ளது. நியூயார்க் வரும் நாட்களில் இன்னும் அதிகமான கேஸ்களை சந்திக்கும் என்று கூறுகிறார்கள். உலகில் எங்கும் இப்படி ஒரு நிலை இல்லை.

    பிணங்களுக்கு இடம் இல்லை

    பிணங்களுக்கு இடம் இல்லை

    இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா காரணமாக பலர் பலியாகி வருவதால் அங்கு பிணங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் அங்கு தினமும் சராசரியாக 800 பேர் வீதம் பலியாகிறார்கள். ஆம் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் இத்தனை பேர் பலியாகிறார்கள். அங்கு இருக்கும் பெரிய கல்லறைகள் எல்லாம் இப்போதே பிணங்களை புதைக்க இடம் இன்றி புலம்பும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    ஐஸ் பெட்டியில் பிணங்கள்

    ஐஸ் பெட்டியில் பிணங்கள்

    ஏற்கனவே 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான உடலை மருத்துமனையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள். நியூயார்க்கில் புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள். நியூயார்க்கில் இருக்கும் பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் அனைத்திற்கும் தினமும் 80-90 பிணங்கள் வருவதாக அங்கு பணியாற்றும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    இதனால் இன்னும் ஒரு வாரத்தில் சுத்தமாக பிணங்களை புதைக்க இடம் இருக்காது. கொரோனா பாதித்த நபர்கள் என்பதால் இவர்களை புதைக்கவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அங்கு இதனால் பொது பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள். ஆம் மக்கள் பயன்படுத்தி வரும் பார்க்குகளை மொத்தமாக இடித்துவிட்டு அப்படியே அதை கல்லறையாக மாற்றும் யோசனையில் இருக்கிறார்கள்.

    வேறு தீவு

    வேறு தீவு

    அதேபோல் அருகில் இருக்கும் ஹார்ட் தீவில் பிணங்களை புதைக்க தொடங்கி உள்ளனர். இது அநாதை பிணங்களை புதைப்பதற்கு என்று இருக்கும் பகுதியாகும். இந்த இடத்தில் கொரோனா நோயாளிகளை புதைக்க தொடங்கி உள்ளனர். தினமும் 30-40 பேர் வீதம் இங்கு புதைக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Coronavirus: No Place to bury the bodies, New York now facing the new problem in USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X