நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. வரலாற்றை மாற்றும் நுண்ணிய வைரஸ்.. பகையை மறந்து கைகோர்க்கும் ரஷ்யா-அமெரிக்கா.. திருப்பம்!

உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டு எதிர் துருவங்களான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை ஒன்றாக இணைத்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டு எதிர் துருவங்களான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை ஒன்றாக இணைத்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே.. இது பழைய தமிழ் படத்தில் வரும் பாடல். ரஷ்யா - அமெரிக்கா உறவை சரியாக சொல்ல இந்த ஒற்றை பாடல் வரி போதுமானது. 2010 தொடக்கத்தில் இருந்து கடந்த 10 வருடங்கள் அமெரிக்காவில் என்ன கெட்ட விஷயம் நடந்தாலும், எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அமெரிக்கா முதலில் சந்தேகம் கொள்ளும் நாடு ரஷ்யாதான்! அமெரிக்காவில் என்ன அசைந்தாலும் அதற்கு ரஷ்யாதான் காரணம் என்ற புகார் உள்ளது.

    நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல ஹாலிவுட் படங்கள் தொடங்கி அமெரிக்கா வெளியிடும் ''ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'' போன்ற நெட்பிளிக்ஸ் சீரிஸ்கள் வரை அனைத்திலும் ரஷ்யாதான் வில்லன். ஏன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதற்கே ரஷ்ய அதிபர் புடினின் தந்திரம்தான் காரணம் என்று புகார்கள் உள்ளது.

    இந்தியாவில் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரிக்கிறது- 2,586 பேருக்கு பாதிப்பு- 73 பேர் பலி! இந்தியாவில் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரிக்கிறது- 2,586 பேருக்கு பாதிப்பு- 73 பேர் பலி!

    ரஷ்யா - அமெரிக்கா சண்டை

    ரஷ்யா - அமெரிக்கா சண்டை

    ரஷ்யா அமெரிக்கா சண்டை என்பது சோவியத் யூனியன் இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அமெரிக்காவின் தீவிர கம்யூனிச எதிர்ப்பு இதை அதிகப்படுத்தியது. விண்வெளி துறையில் இரண்டு நாடுகளும் போட்டுக்கொண்ட ''டாக் - பைட்'' இந்த சண்டைக்கு எண்ணெய் ஊற்றியது. அதன்பின் அணு ஆயுத சோதனைகள், பொருளாதார போர்கள் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் தீரா பகையில் இருந்தது.. இவர்களுக்கு இடையிலான வாய்க்கால் தகராறை பல உலக நாடுகள் தீர்க்க முயன்றும் முடியவில்லை.

    சிறிய வைரஸ்

    சிறிய வைரஸ்

    ஆனால் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாடுகளும் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது.. இந்த சண்டையை தீர்த்து வைத்தது டிரம்ப் இல்லை.. புடின் இல்லை.. ஏன் ஐநா சபை கூட இல்லை.. இந்த சண்டையை தீர்த்து வைத்தது மிக நுண்ணிய கொரோனா வைரஸ்! உலகம் முழுக்க அரசியல் சூழ்நிலைகளை மாற்றி வரும் கொரோனா வைரஸ் தற்போது ரஷ்யா அமெரிக்காவை ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது.

    உதவி செய்ய முடிவு

    உதவி செய்ய முடிவு

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கும் நேரம், அமெரிக்காவில் 2 லட்சம் நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நேரம். அன்றுதான் செய்தியாளர்களிடம் ''இன்னும் மோசமான இரண்டு வாரங்கள் நமக்கு காத்து இருக்கிறது'' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். அன்றே (மார்ச் 30ம் தேதி) அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் செய்தார். கொரோனா குறித்து இரண்டு எதிர் எதிர் துருவங்கள் பேசிக்கொண்டார்கள்.

    என்ன முடிவு செய்தனர்

    என்ன முடிவு செய்தனர்

    இந்த போன் காலின் முடிவில் இரண்டு நாடுகளும் மாற்றி மாற்றி உதவி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. கொரோனாவை இரண்டு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆம், இத்தனை வருடங்களுக்கு பிறகு கொரோனா இந்த இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்து உள்ளது. அதன்படி ரஷ்யாவிற்கு அமெரிக்கா பொருளாதார உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளது. மாறாக ரஷ்யா அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது.

    ஒப்பந்தம் கையெழுத்தானது

    ஒப்பந்தம் கையெழுத்தானது

    ரஷ்யா, அமெரிக்காவிற்கு டன் கணக்கில் மருந்துகளை, முகமூடிகளை, கிளவுஸ்களை, வெண்டிலெட்டர்களை அனுப்ப உள்ளது. இதற்கான ஏற்றுமதி இன்னும் மூன்று நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா குறித்த ஆராய்ச்சியில் உதவவும் மருத்துவர்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்கு கைமாறாக வரும் நாட்களில் பொருளாதார ஒப்பந்தங்களை செய்ய ரஷ்யா - அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.

    செம ஆஃபர்

    செம ஆஃபர்

    அதில், அதிபர் புடினின் இந்த உதவியை நாங்கள் பாராட்டுகிறோம். இது மிக சிறந்த ஆஃபர். அவர் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதற்கு என்னால் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மிகப்பெரிய விமானம் ஒன்றில் நல்ல தரமான மருத்துவ பொருட்களை அவர்கள் நமக்கு அனுப்புகிறார்கள். நாம் இதை ஏற்றுகொள்ள வேண்டும். இதற்கு பின் ரஷ்யாவின் அரசியல் திட்டம் உள்ளதா என்று சிலர் கேட்கிறார்கள்.

    ரஷ்யா ஆட்டம்

    ரஷ்யா ஆட்டம்

    நான் அப்படி நினைக்கவில்லை. நான் கொஞ்சம் கூட அப்படி நினைக்கவில்லை. அவர்கள் நமக்கு மருத்துவ உதவி செய்கிறார்கள். அது நம் நாட்டு மக்கள் உயிரை காக்கும். நான் அதை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார். அவரிடம் நான் போனில் பேசினேன். அவர் என்னிடம் நன்றாக பேசினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது, என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    வரலாறு மாறும்

    வரலாறு மாறும்

    கம்யூனிச ரஷ்யாவை பல காலமாக வெறுத்து வந்த முதலாளித்துவ அமெரிக்காதான் தற்போது அதே ரஷ்யாவை பாராட்டி உள்ளது. இன்னொரு பக்கம் கொரோனாவை சீனா வைரஸ் என்று கூறிய அதே டிரம்ப் சீனாவிடம் உதவி கேட்கும் நிலைக்கு சென்று உள்ளார். அமெரிக்கா தொடங்கி உலகம் முழுக்க கொரோனா நிகழ்த்தும் மாற்றம் இதுதான்.. இப்போதும் மட்டுமின்றி இன்னும் பல வருடங்களுக்கு கொரோனா அரசியல் ரீதியான பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்த போவதுதான் நிதர்சனம்!

    English summary
    Coronavirus: Russia Helps US, The two rival joined hands to fight the outbreak together.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X