Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பத்யம்.. இதுதான் ஆண்கள் செய்யும் தவறு.. "இந்த" 5 விஷயம் ரொம்ப முக்கியம்.. டாக்டர்கள் புது தகவல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பொதுவாக உடலுறவு என்பது எல்லா மனிதர்களுக்குமே ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் இந்த உடலுறவு விஷயங்களில் ஆண்கள் அதிகமான தவறுகளை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஆண்கள் செய்யும் தவறுகள் என்ன என்றும், அதை எப்படி சரி செய்வது எனவும் பாலியல் துறை சார்ந்த மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

அதாவது பொதுவாக ஆண்கள் செய்யும் முதல் தவறு சேட்டிங். ஆமாங்க, பெரும்பாலான ஆண்கள் பெண்களை ஈர்ப்பதற்கு அவர்களின் மொபைல் எண்களை தேடி கண்டுபிடிப்பார்கள். பின்னர் முதலில் சேட்டிங்கிலிருந்து தொடங்குவார்கள். இப்படி தொடங்குவதுதான் சரியானது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இந்த முறையில் பெண்களுக்கு பெரிய அளவில் விருப்பம் இருப்பதில்லை. இதனை ஒரு தொல்லையாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

எனவே அடுத்தமுறை நம்பர் கிடைத்தால் தைரியமாக போன் செய்து பேசுங்கள் என உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பேசுவதன் மூலம் பெண்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும் என்றும், இது இருவருக்கும் இடையேயான பாலியல் புரிதலையும் வலுப்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். டெக்ஸ்ட் செய்வதால் இந்த புரிதல் ஏற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 சர்வாதிகாரியா ஆண்கள்?

சர்வாதிகாரியா ஆண்கள்?

அதேபோல இரண்டாவது தவறு விருப்பங்களை திணித்தல். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய விருப்பத்தை தங்களது மனைவி அல்லது காதலி மீது திணிப்பார்கள். இது அப்பெண்களுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே பெண்களுக்கென்று தனியாக விருப்பம் இருக்கிறது என்றும், அதனை செயல்படுத்தவிடாமல் தங்களது விருப்பத்தை ஆண்கள் திணிப்பதன் மூலம் அந்த இடத்தில் அவர்கள் சர்வதிகாரியாக மாறுகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான ஆண்களிடம் பெண்கள் பாலியல் உறவுகளை வைப்பதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.

 மூன்றாவது தவறு

மூன்றாவது தவறு

அடுத்தது மூன்றாவது தவறு. இந்த தவறுதான் பெரும்பாலான ஆண்களின் பலவீனம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, 'ஃபோர்ப்ளே'. இது உடலுறவுக்கு முன்னர் செய்ய வேண்டிய விஷயம். ஆபாசப்படங்களில் வருவதைப்போல பெரும்பாலான ஆண்கள் எடுத்தவுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்று பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு செய்யாமல் ஃபோர்ப்ளே செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது இருவருக்கும் இடையிலான உடலுறவு பந்தத்தை மேலும் அதிகரிக்கும். ஃபோர்ப்ளே என்பது உடலுறவுக்கு சிறு சிறு விளையாட்டில் ஈடுபடுவதாகும்.

 இதில் தவறவிடக்கூடாது

இதில் தவறவிடக்கூடாது

முத்தம் கொடுப்பது, கழுத்து தொடங்கி உள்ளங்கால் வரை தொட்டு விளையாடுவது போன்றவை மூலம் பெண்கள் விரைவில் உச்சமடைய வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு இல்லையெனில் அவர்கள் உச்சமடைய தாமதமாகலாம். எனவே அடுத்த முறை ஆண்கள் தங்கள் இணையுடன் ஒன்று சேரும்போது இந்த ஃபோர்ப்ளே விளையாட்டை கவனத்தில் வைத்துக்கொள்ளவும். நான்காவது தவறு ஆண்கள் அனைவரும் செய்யக்கூடியது. அதாவது படுக்கையறைக்குள் ஒரு பெண் வருகிறாள் எனில் அந்த அறை சுத்தமாக இருப்பது அவசியம். ஆனால் ஆண்கள் அனைவரும் தங்கள் உள்ளாடைகளை அங்கும் இங்கும் கண்டபடி வீசி வைத்திருப்பார்கள்.

 முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

இந்த காட்சியை பார்த்த உடனேயே பெண்கள் தங்கள் இணை மீது வெறுப்பு கொண்டுவிடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே எது சரியாக இருக்கிறதோ இல்லையோ படுக்கையறையை மட்டும் கவனதில் கொள்ள வேண்டும். படுக்கையறை சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். மேலும் சுவரில் தேவையற்ற படங்கள் இருப்பின் அது அப்புறப்பட்டுத்தப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் பெண்களுக்கு உங்கள் மீது உள்ள ஈர்ப்பை அதிகரிக்கும். இது தவிர சில போனஸ் டிப்ஸ்களும் உண்டு. அதாவது காலையில் எழுந்தவுடன் இணைக்கு காதல் செய்தியை அனுப்புங்கள். இது காதலலை வலுவடைய வைக்கும்.

பரிசுகள்

பரிசுகள்

அதேபோல இரண்டு பேரும் பேசிக்கொள்ளும்போது அப்பெண்ணுக்கு பிடித்த புத்தகம், கவிதை, அவளுடைய சிந்தனைகள் குறித்து அதிகம் பேச வேண்டும். இத்துடன் அவளுக்கு பிடித்த திரைப்படத்தை மேற்கோள் காட்டுவது போன்றவை உங்கள் மீதான ஈர்ப்பை அவளுக்கு இன்னும் அதிகரிக்கும். அதேபோல சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இணைக்கு பிடித்த காலை உணவை சமைத்து கொடுத்தால் உண்மையாகவே அவர் அசந்துவிடுவார். மேலும் பூக்கள் மற்றும் சில சிறிய சிறிய பரிசுகளை கொடுப்பது உங்கள் இருவருக்கும் இடையேயுள்ள நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+