பாகிஸ்தான் ராணுவத்துக்கு 5700 கோடி வழங்கும் அமெரிக்கா.. இந்தியாவை கொதிப்பில் ஆழ்த்திய டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா உடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பழமையான எஃப்-16 போர் விமானங்களை புதுப்பிப்பதற்காக 686 மில்லியன் டாலரை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 5,700 கோடிக்கும் அதிகமான தொகையாகும். பாகிஸ்தானை பொறுத்தவரை அமெரிக்கா உடன் தனது உறவை மேம்படுத்த தீவிரமாக முயற்சி செய்த சில வாரங்களிலேயே இப்படியான அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவி காலத்தில் இந்தியா உடன் உறவை புதுப்பிப்பது பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தான் அதிபர், பாகிஸ்தான் ராணுவ தளபதியை டிரம்ப் பாராட்டி உள்ளார். டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்றதில் இருந்தே, பாகிஸ்தானுடன் உறவை நெருக்கமாக்க விரும்புகிறார். பாகிஸ்தானும் நெருக்கமாகவே விரும்புகிறது.

Donald Trump lines up new Rs 5700 crore million military aid package to strengthen Pakistan s military

இப்படி பாகிஸ்தானுடனான உறவை புதுப்பிக்க அமெரிக்க விரும்புவதன் பின்னணியில் காரணங்கள் இல்லாமல் இல்லை.. அமெரிக்கா விரும்புகிறதா இல்லையோ, டிரம்ப் ரொம்பவே விரும்புகிறார். ஏனெனில் தனது குடும்பத்தினைர் மற்றும் நெருக்கமானவர்கள் மற்றும் தனக்கு பிசினஸில் பார்ட்னராக உள்ளவர்களுக்கு கிரிப்டோகரன்சி ஒப்பந்தங்கள், அரிய பூமிக் கனிமங்களை பாகிஸ்தான் வாரி வழங்குவதாக அறிவித்தது. இந்த தீவிரமான இராஜதந்திர நடவடிக்கைகள் தான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் மாறக்காரணம் என்கிறார்கள். பாகிஸ்தானின் இந்த பேக்கரி டீலிங் பிடித்து போனதால் டிரம்பின் கவனமே அப்படியே பாகிஸ்தான் நாட்டின் மீது திரும்பி உள்ளது.

அதிபர் டிரம்ப் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிரை ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து இரண்டு முறை சந்தித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை இந்த ஆண்டு மூன்று முறை சந்தித்துள்ளார். ஷெரீப்பை டிரம்ப் "நல்லவர்" என்று பாராட்டியதோடு, "ஃபீல்ட் மார்ஷல்" என்ற பட்டத்தைக் கண்டு வியந்து, அதை மீண்டும் மீண்டும் உச்சரித்து வருகிறாராம் டிரம்ப்.

இதனால் தான் பாகிஸ்தானுக்கு சாதகமான சுங்கவரி சலுகைகள் கிடைத்தது, இந்தியாவோ அமெரிக்கா சொன்னபடி கேட்க முடியாது என்று ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதால் 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார். இந்தியாவிற்கு சுண்ணாம்பு , பாகிஸ்தானுக்கு வெண்ணை என்ற கொள்கையில் டிரம்ப் தற்போது இருக்கிறாராம், அதன் ஒரு பகுதியாகவே, பாகிஸ்தானின் பழமையான எஃப்-16 போர் விமானங்களை புதுப்பிப்பதற்காக 686 மில்லியன் டாலரை (5700 கோடி) அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்தியா அமெரிக்கா இடையேயான இருதரப்பு அழுத்தங்களை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை.

அண்மையில் ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வந்த போது பேசிய வார்த்தைகள் அமெரிக்காவை கோபத்தில் ஆழ்த்தியது. அப்போது இந்தியா - அமெரிக்க உறவுதான் "21 ஆம் நூற்றாண்டின் வரையறுக்கும் உறவு" என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியம் என்றும் அமெரிக்கா மிகவும் பெருமையாக பேசியது. அப்படியே பேசிய சில நாளிலேயே 5700 கோடியை பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிக்காக அமெரிக்கா வழங்கியிருக்கிறது.

F-16 போர் விமானங்கள் என்பது பாகிஸ்தானின் விமானப்படையில் உள்ள மிக முக்கியத் தாக்குதல் ஆயுதங்கள் ஆகும். இந்த விமானங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டால், பாகிஸ்தானின் போர் திறன் அதிகரிக்கும். எனவே எல்லைப் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது என்பது அமெரிக்காவின் வழக்கம் என்பது மூத்த செய்தியாளர்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+