விடாமல் துரத்தும் அமெரிக்கா.. டிரம்ப் மூக்கை உடைத்த ஐரோப்பா! இந்தியாவிற்கு வரி போட மறுப்பு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டனின் அழுத்தத்திற்கு இணங்கி ரஷ்ய எண்ணெய் கொள்முதல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா மீது வரி போடுவது குறித்தும் அவர் எச்சரித்து உள்ளார்.

ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரை வரி விதிக்கவும் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் சீனா மீது இத்தகைய வரிகளை விதிக்க தயக்கம் காட்டுகிறது. அதற்கு மாறாக, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறி வருகிறது.

இந்தியா டிரம்ப் மோதல்

ரஷ்யா மீதான தற்போதைய தடைகள் போரைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, தங்கள் தடைகளை கடுமையாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். "ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது. அவர்கள் எண்ணெய் வாங்க நான் விரும்பவில்லை அவர்கள் விதிக்கும் தடைகள் போதாது. நான் தடைகளை விதிக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் நான் செய்வதைப் போல அவர்களும் கடுமையாக்க வேண்டும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

Europe does not succumb to US Donald Trump Pressure Will not apply new tariff against India

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது தனக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அமெரிக்க கருவூலத் துறையும், G7 கூட்டாளிகளை பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது. கிரெம்ளின் வருவாய் ஆதாரத்தைத் தடுக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

பிடி கொடுக்காத ஐரோப்பா

ஆனால் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. வரும் காலங்களில் இந்த வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு வர்த்தகம் ஏற்கனவே 137 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை முடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதாவது டிரம்ப் என்னதான் எதிர்ப்பு கொடுத்தாலும், இந்தியா அந்த எதிர்ப்பை கண்டுகொள்ளாது.. ஐரோப்பாவுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சி செய்யும்.. டிரம்ப் அழுத்தம் கொடுத்தாலும் அதை மீறி இந்தியா.. ஐரோப்பாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்றே தகவல்கள் வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகம் குறித்து இந்தியாவுக்குத் தொடர்ந்து மாறுபட்ட சிக்னல்களை அளித்து வருகிறார். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசுகிறார். மறுபுறம், இந்திய மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறார். டிரம்பின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குக் குழப்பத்தையும், அபாயத்தையும் உருவாக்குகிறது.

ஏற்கனவே, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா 50% ஆக இருமடங்காக உயர்த்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக இது பார்க்கப்பட்டது. இப்போது, ஐரோப்பாவும் இதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது நிலையான வர்த்தகக் கொள்கையாக இல்லாமல், திடீர் அதிர்ச்சியாகவே உள்ளது.

டிரம்ப் ஐரோப்பாவிற்கு அழுத்தம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். கடந்த 4 நாட்களுக்கு முன்பே டிரம்ப் இதற்கான கோரிக்கையை வைத்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஐரோப்பாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளாராம்.

ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+