நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மூச்சு திணறுது".. போய் வா ஜார்ஜ்.. உணர்ச்சிகரமாக விடை தர தயாராகும் மக்கள்.. ஹூஸ்டனில் குவிகின்றனர்

ஜார்ஜ் பிளாய்ட்டின் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது

Google Oneindia Tamil News

நியூயார்க்: "மூச்சு திணறுது" என்று சொல்லி சொல்லியே உயிரைவிட்ட கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதி சடங்கு இன்று நடக்க உள்ளது.. இதற்காக மக்கள் ஹூஸ்டன் நகரில் திரள தொடங்கி உள்ளனர்.

மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ம் தேதி ஒரு பெட்டிக்கடைக்கு கறுப்பினரான ஜார்ஜ் ஃபிளாய்ட் சென்றார்.. சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டவும், கடைக்காரரோ, அந்த நோட்டை பார்த்ததும் போலி டாலர் என தவறுதலாக நினைத்துகொண்டு, போலீசுக்கு போன் செய்தார்.. 4 போலீசாரும் அடுத்த செகண்டே அங்கு வந்து ஜார்ஜை விசாரித்தனர்.

 george floyd: public prepare to pay final tribute to george floyd today

விசாரணையின்போது ஆவேசமடைந்த டெரண் ஜோவின் என்ற போலீஸ் அதிகாரி, ஜார்ஜ் கழுத்தை பிடித்து முட்டியில் அமுக்கியதில், அவரது கழுத்து நெரிபட்டது.. மூச்சு விடவில்லை என்று ஜார்ஜ் கதறியும், அதிகாரி முட்டியை சிறிதும் நகர்த்தாமல், அழுத்தத்தை மட்டும் மேலும் மேலும் தந்து கொண்டே இருந்தார். இதை உடன் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்களும் வேடிக்கை பார்த்தனர். மூச்சு திணறி திணறியே ஜார்ஜ் உயிர் பிரிந்தது.

இந்த வீடியோ வெளியாகி உலக மக்களை நிலைகுலைய வைத்தது.. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை.. உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.. உலகளாகவிய இன, நிறவெறி ஆர்ப்பாட்டங்கள் வெடித்து கிளம்பி உள்ளன. ஜார்ஜ் மரணத்துக்கு இன்னமும் நீதி கேட்டு மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஜாா்ஜ்-ன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் இன்று நடக்கிறது.. இது தொடா்பாக அவரின் குடும்ப உறுப்பினா் ஒருவா் சொல்லும்போது, "ஜாா்ஜ்-ன் அம்மாவின் கல்லறைக்கு பக்கத்திலேயேதான் அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்படும்'' என்றார்.

இன்று இறுதி சடங்கு நடப்பதால், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சனிக்கிழமை இரவு ஹூஸ்டன் நகருக்கு எடுத்துவரப்பட்டது.. "ஃபவுண்டன் ஆஃப் பிரேஸ்" என்ற சர்ச்சில் ஜார்ஜ் உடல் வைக்கப்படவுள்ளது.

மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா! மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா!

தற்போது வைரஸ் தொற்றின் பரவல் உச்சக்கட்டத்தில் அங்கு உள்ளதால், அஞ்சலி செலுத்த வருகை தரும் மக்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன... ஒரே சமயத்தில், 15 நபா்களுக்கு மேல் சர்ச்சுக்குள் அனுமதி இல்லை.. கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க், போன்றவவைகளுடன் வர வேண்டும், சமூக இடைவெளியை இறுதிவரை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சிலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபா் தோதலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன், கலந்து கொள்ள உள்ளதாகவும், ஜார்ஜ் குடும்பத்தினரை ஜோ பிடன் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதை அவரது உதவியாளரே தெரிவித்துள்ளார்.. தற்போது ஜார்ஜை வழியனுப்ப மக்கள் ஹூஸ்டன் நகரில் குவிய தொடங்கி உள்ளனர்.

English summary
george floyd: public prepare to pay final tribute to george floyd today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X