• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த யோசனை எனக்கு வராம போச்சே.. பிரசவ அறையில் மனைவிக்கு கணவன் செய்த விஷயம்.. இதயம் தொடும் வீடியோ

|
  பிரசவ அறையில் மனைவிக்கு கணவன் செய்த விஷயம்.. இதயம் தொடும் வீடியோ

  நியூயார்க்: நிறைமாத கர்ப்பிணியான மனைவி இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறார் என்ற நிலையில் அவரது கணவர் அவளுக்காக இரண்டு நாள் உழைத்து அவர்களின் காதல் கதையை தனித்துவமான யோசனைகளுடன் ஒரு புத்தகமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

  அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். புத்தகத்தை கணவன் திருப்பும் போது ஒவ்வொரு பக்கமும் பார்வையாளர்களுக்கு கண்ணீரையும் ஆனந்த்தையும் வரவழைக்கிறது.

  நான்கு நிமிடம் ஓடும் அந்த வீடியோதான் உலகத்தின் தெறி ஹிட். அதை பார்த்த பலரும் நமக்கும் இப்படி ஒருயோசனை தோணலையோ என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். அப்படி என்ன சிறப்பான தரமான வீடியா என்பதை இப்போது பார்ப்போம்.

  காதல் புத்தகம் உருவாக்கினார்

  அமெரிக்காவின் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் கெண்டல் கேவர். இவரது காதல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் மனைவிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தங்கள் காதல் கதையை புத்தகமாக உருவாக்க முடிவு செய்தார். இதற்காக இரண்டு நாள் உட்கார்ந்து யோசித்து சூப்பரான புத்தகத்தை உருவாக்கி உள்ளார்

  இரண்டு நாள் உழைப்பு

  இரண்டு நாள் உழைப்பு

  அந்த புத்தகத்தை மருத்துவமனையில் பிரசவத்திற்காக படுத்துள்ள மனைவிக்கு காட்டியிருக்கிறார். செப்டம்பர் 4ம் தேதி இந்த வீடியோவை "என் மனைவியை ஊக்கப்படுத்த என்னுடைய இரண்டு நாள் உழைப்பு" என்ற கேப்சனுட்ன் கெண்டல் கேவர் ஷேர் செய்துள்ளார். 4 நிமிடத்திற்கும் குறைவாக ஓடும் வீடியோவில் பல்வேறு காதல் கேள்விகள் அடங்கிய புத்தகத்தை திருப்பியபடி கெண்டல் கேவர் நிற்கிறார்.

  காதல் கதை

  காதல் கதை

  அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'மூச்சு விடு' (breathe) என்று சாதாரணமாக தொடங்குகிறது. இரண்டாவது பக்கத்தை திருப்பும் போது நாம் முதல் முதலாக எப்போது சந்தித்தோம் என்பதை உன்னால் நினைவு கூற முடியுமா? என்று நினைவூட்டுகிறது. அடுத்தடுத்த பக்கங்கள் இந்த ஜோடியின் மகிழ்ச்சியான மற்றும் காதல் நேரங்களை பட்டியலிடுகிறது.

  வாசத்தை உணர்ந்த குழந்தை

  வாசத்தை உணர்ந்த குழந்தை

  மல்லிகைப்பூவின் வாசத்தை போல் அவர்களின் காதலை சுவாசிக்க வைத்தது அந்த மூச்சு விடு (breathe) புத்தகம். அந்த மல்லிகையின் வாசத்தை உணர்ந்தது அம்மா மட்டுமல்ல வயிற்றில் இருந்து உலகிற்கு வெளியே வர துடித்துக்கொண்டிருந்த குழந்தையும் தான்.

  சமூக வலைதளத்தில் வைரல்

  சமூக வலைதளத்தில் வைரல்

  பார்ப்போரின் இதயத்தை தொடும் இந்த அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. உலகம் முழுவதும் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. சுமார் 58 ஆயிரம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 6ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

  சூப்பர் யோசனை

  சூப்பர் யோசனை

  இந்த வீடியாவை பார்த்த பலரும் இந்த யோசனை எனக்கு வராம போச்சே என்று கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். பேஸ்புக்கில் ஒரு பெண், அதையெல்லாம் அந்த பெண் இந்த சமயத்தில் தெரிந்து கொள்வது இனிமையான ஊக்கமளிக்கும் என்றும் சூப்பர் சிந்தனை என்றும் கூறியுள்ளார். இன்னொருவர் கடவுளே என்ன ஒரு அற்புதம், அழகாகவும் இதயப்பூர்வமாகவும் இருக்கிறது. நான் இங்கே கண்ணீருடன் அமர்ந்து இருக்கிறேன் என கூறியுள்ளார். அதேநேரம் பிரச வேளையில் ஒரு புத்தகத்தை படிக்க விரும்புவேன் என நினைக்க வேண்டாம் என சில பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

  தாயும் சேயும் நலம்

  தாயும் சேயும் நலம்

  சரி இப்படி காதல் மனைவிக்கு காதல் கதை சொல்லி உற்சாகம் ஊட்டிய கெண்டல் கேவருக்கு அழகான பெண் குழந்தை அன்றே பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Georgia Man Kendall Caver helps wife through labour with book on their love story. Video goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more