வாழ்க்கையை புரட்டி போட்ட ரயில் பயணம்! அமெரிக்காவின் மாடலிங் உலகை! திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்
நியூயார்க்: ஹைதராபாத்தை சேர்ந்த 25 வயது பவிதா மண்டவா, தற்போது இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்துள்ளார். நியூயார்க் subway ரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட இவர், 'ஷேனல் மெட்டியர்ஸ் டி ஆர்ட் 2026' ஷோவைத் தொடங்கி வைத்த முதல் இந்திய மாடல் என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.
முதல் அறிமுகத்திலேயே சானல் நிகழ்ச்சியை வழிநடத்திய முதல் இந்திய மாடல் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதன் மூலம், உலக ஆடம்பர ஃபேஷன் அரங்கில் இந்தியப் பிரதிநிதித்துவத்தில் ஒரு மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். சாதாரணமாக ரயிலில் பயணிக்க சென்ற இவரின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறி உள்ளது.

பேஷன் உலகம்
பொதுவாக பேஷன் உலகில் மாடலாக தேர்வு செய்யப்படுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் சர்வதேச நிறுவனங்களின் பேஷன் ஷோக்களில் மாடலாக வருவது கிட்டத்தட்ட இயலாத காரியம். இந்தியர்களுக்கு எல்லாம் இது மிக கடினமான விஷயம்.
அதிலும் bottega veneta, chanel போன்ற காஸ்ட்லி சர்வதேச நிறுவனங்களின் மாடலாக வருவது எல்லாம் கனவுதான். ஆனால் அந்த கனவை பவிதா மண்டவா என்ற இந்திய பெண் நிறைவேற்றியதோடு இல்லாமல் அந்த நிகழ்விலேயே முன்னின்று வாக் செய்த மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
யார் இந்த பவிதா மண்டவா?
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலைப் பட்டம் பெற்ற ஹைதராபாத்தை சேர்ந்த பவிதா. பின்னர் அமெரிக்கா சென்று, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உதவி தொழில்நுட்பம், மனித-கணினி தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பில் சிறப்பாக செயல்பட்ட பாவித்த இன்னொரு பக்கம் ஃபேஷன் மீதான ஆர்வத்தை ரகசியமாக வளர்த்துக்கொண்டார்.
பவிதாவின் மாடலிங் பயணம் எதிர்பாராத விதமாகத்தான் தொடங்கியது. நியூயார்க் சுரங்கப் பாதையில் பயணத்தின்போது, மாட்யூ ப்ளேஸியால் வடிவமைக்கப்பட்ட 'பாட்டெகா வெனெட்டா ஸ்பிரிங்/சம்மர் 2025' ஷோவுக்கு தேர்வானார். அங்கே வந்த ஷேனல் குழுவினர் இவரை பார்த்து.. நீங்கள் மாடல் போலவே இருக்கிறீர்கள் என்று புகழ்ந்து உள்ளனர்.
மாடலாக மாறியது எப்படி?
"நான் அட்லாண்டிக் அவென்யூவில் சாதாரணமான நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் மாடலாக விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன். கல்விக்கடனைச் செலுத்த முடியும் என்றதும் 'சரி, முயற்சிப்போம்' என்று ஏற்றுக்கொண்டேன்... எனக்கு பாட்டெகா வெனெட்டா ஸ்பிரிங்/சம்மர் 2025 என்றால் என்னவென்றே தெரியாது. நான் எளிமையான குடும்ப பின்னணியை சேர்ந்த பெண். அதனால் எனக்கு இதெல்லாம் தெரியாது. இந்த மொத்த நிகழ்வும் என் வாழ்க்கையை மாற்றி உள்ளது" என்று பவிதா கூறி உள்ளார்.
இச்சந்திப்பு அவரது வாழ்க்கையைப் புரட்டியது. சில மாதங்களிலேயே, அதே ரயில் மேடைக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஷேனல்' ஷோவின் முகமாய் பவிதா திரும்பினார். அங்கேயே பேஷன் ஷோ ஒன்றும் நடத்தப்பட்டது அது இன்ஸ்டன்ட் ஹிட் ஆனது. இவரின் அழகு மற்றும் வசீகரம் காரணமாக.. Chanel நிகழ்ச்சியில் வெறும் மாடலாக வராமல் அதை வழி நடத்திய முன்னணி மாடலாக இவர் தேர்வானார். நியூயார்க் subway ரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட இவர், 'ஷேனல் மெட்டியர்ஸ் டி ஆர்ட் 2026' ஷோவைத் தொடங்கி வைத்த முதல் இந்திய மாடல் என்ற சரித்திரச் சாதனையைப் படைத்துள்ளார்.
பெற்றோரின் வீடியோ வைரல்
பவிதா இந்த பேஷன் ஷோவின் வீடியோவையும்.. அதற்கு அவரின் பெற்றோர்கள் கொடுத்த உணர்வுபூர்வ ரியாக்சனையும் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். தாய் கண்ணீர் மல்க மகளின் பெயரை உச்சரிக்க, தந்தை பெருமையுடன் தனது மக்களை பார்த்த அந்த பார்த்தது வைரலானது. "இது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. @chanelofficial மற்றும் @matthieu_blazy க்கு நன்றி" என பவிதா குறிப்பிட்டிருந்தார்.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications