டிரம்ப் 8 அடின்னா.. அயோத்துல்லா 16 பாய்கிறார்.. அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் ஈரான்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி உள்ளது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கும் என்று தெரிவித்துள்ளது.

Israel Iran

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஈரானை தாக்குவோம் என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்.. நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நிலைநிறுத்தம்

இந்த போருக்கு தயாராகும் விதமாக அமெரிக்க ராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்தி உள்ளது. போர் ஏற்படும் பட்சத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்ப தேவைகள் ஏற்படும் என்பதால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா உட்பட மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் 40,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் உள்ளனர்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் கடுமையான பதிலடியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா தனது போர் கப்பல்களை மத்திய கிழக்கில் உள்ள கடற்பகுதிகளுக்கு நகர்த்தி வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்கா

பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட இரண்டு போர் கப்பல்கள் கிழக்கு மத்திய தரைக்கடல் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அப்பகுதியில் வேறு இடத்தில் இருந்த இந்த கப்பல்கள், தற்போது இஸ்ரேல் அருகே திருப்பி விடப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிகள், இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். மேலும், ஈரான் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவக்கூடும். கடந்த ஆண்டு அக்டோபரில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அமெரிக்க கப்பல்கள் இதேபோன்ற பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஈரானும் இஸ்ரேலும் போர் முனைப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் இப்போர் விரிவடையும் என்று ஈரான் எச்சரிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+