நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலான் மஸ்க் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அலுவலகத்தை விட்டே வெளியேறிய ஊழியர்கள்.. ட்விட்டரை மூட போறாங்களா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ட்விட்டரை மூட போறீங்களா.. ட்விட்டர் இனிமே இயங்காதா.. ஆர்ஐபி ட்விட்டர்.. இதுதான் தற்போது ட்விட்டர் முழுக்க டிரெண்டிங்கில் இருக்கும் விவாதம். எலான் மஸ்க்கே ட்விட்டர் நிறுவனத்திற்கு ட்விட்டர் நிறுவனமே சமாதி கட்டுவது போல மீம் போட்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மட்டும் இந்த வாதம் நடக்கவில்லை.. ட்விட்டர் உள்ளே அதன் ஊழியர்களும் கூட இந்த விவாதத்தை மேற்கொண்டு உள்ளனர்.

ட்விட்டர் குறித்து மாறி மாறி மீம்ஸ்களை தங்கள் மெயிலில் அனுப்பி வருகிறார்களாம். இதெல்லாம் போக இன்று காலை அலுவலகம் திறந்த போது ட்விட்டர் ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. நேற்றும் ஊழியர்கள் பலர் திடீரென வேலையைவிட்டு நீங்குவதாக அறிவித்ததால் எலான் மஸ்க் வேறு வழியின்றி ட்விட்டர் தலைமையகத்தை மூடினார்.

அப்படி என்னதான் நடக்கிறது ட்விட்டரில்? ஏன் இந்த பிரச்சனை? ட்விட்டர் நிறுவனத்தை உண்மையில் மூட போகிறார்களா? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி இருந்த நாங்க.. இப்போ.. எலான் மஸ்க் செய்யும் குழப்பத்தால் புலம்பும் ட்விட்டர் ஊழியர்கள்எப்படி இருந்த நாங்க.. இப்போ.. எலான் மஸ்க் செய்யும் குழப்பத்தால் புலம்பும் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர்

ட்விட்டர்

மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே அதில் மாற்றங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் உட்பட டாப் அதிகாரிகளை நீக்கினார். அதன்பின் இந்திய வம்சாவளி கொண்ட பலரை நீக்கினார். இந்திய அலுவலகத்தில் இருக்கும் 90 சதவிகிதம் பேரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். இதெல்லாம் போக ட்விட்டர் ப்ளூ என்ற புதிய ப்ளூ டிக் முறையை கொண்டு வந்தார். இப்படி பல மாற்றங்களை கொண்டு வந்த மஸ்க் கை வைக்க கூடாத ஒரு இடத்தில் கை வைத்தார்.. அதுதான் Ultimatum!

என்ன Ultimatum?

என்ன Ultimatum?

இதை Hardcore Ultimatum என்று அழைக்கிறார்கள். அதன்படி மஸ்க் ட்விட்டர் ஊழியர்கள் எல்லோருக்கும் ஒரு மெயில் அனுப்பி உள்ளார். அந்த மெயிலில் இருக்கும் பார்மை மாலை 5 மணிக்குள் நிரப்ப வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதில் இருந்தது ஒரே கேள்விதான். அந்த கேள்விக்கு கீழ் இருக்கும் ஆப்ஷனில் ஒரே ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்ய வேண்டும். செய்தால் போதும்.. நீங்கள் ட்விட்டர் வேலையில் தொடரலாம்.. சிம்பிளாக இருக்கிறதா அல்லவா? ஆனால் அங்குதான் மஸ்க் ஒரு கன்னி வெடியை வைத்து இருக்கிறார்.

கன்னிவெடி

கன்னிவெடி

அந்த ஒரு கேள்வி.. நீங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? என்பதுதான். அதற்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் "எஸ்". இந்த ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டு சம்மிட் கொடுக்க வேண்டும். எந்த ஒரு ஊழியராக இருந்தாலும் ட்விட்டர் நிறுவனத்தில் தொடர நினைத்தால் இதைத்தான் செய்வார். அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள். ஆனால் இதில் மஸ்க் கொடுத்து இருக்கும் கண்டிஷன்கள்தான் ஊழியர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

கேள்வி கண்டிஷன்

கேள்வி கண்டிஷன்

அந்த கேள்விக்கு கீழே மஸ்க் சில கொடுத்துள்ளார். அதில், நீங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய தயாரா? நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.. மிக கடினமாக.. மிக கஷ்டமான சூழ்நிலையில் நீங்கள் உழைக்க தயாரா? ட்விட்டர் நிறுவனம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் மிக கடுமையான உழைப்பாளி என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கான சோதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை என்ற கண்டிஷன் அதில் உள்ளது. இதுதான் ஊழியர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதையடுத்து ஊழியர்கள் பலரும் அந்த பார்மை பில் செய்யாமல் அலுவலகத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.

வெளியேறினார்கள்

வெளியேறினார்கள்

சிலர் வேலையில் இருந்து வெளியேறி உள்ளனர். சிலர் அந்த பார்மை பில் செய்யவில்லை, சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் லாயரை சென்று சந்தித்து உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 3700 பேரை நீக்க போகிறேன், வரும் நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தில் பொறியாளர்கள்தான் அதிகம் இருப்பார்கள் என்று மஸ்க் சொன்ன நிலையில்தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ட்விட்டர் அலுவலகமே வெறிச்சோடி கிடந்துள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முக்கியமாக critical infrastructure அணியை சேர்ந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர். இதனால் ட்விட்டர் செயலி இயங்குவதே சிக்கலாகி உள்ளது. இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனம் முறையாக இயங்குவதிலேயே சிக்கல் ஏற்படலாம். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் மூடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த செயலி முன்பு போல இயங்காமல் போக நிறைய வாய்ப்புகள் உள்ளன. செயலியில் நிறைய பக்குகள் வரும் நாட்களில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

English summary
Is Twitter gonna be closed down by Elon Musk? What is Hardcore ultimatum?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X