ரொம்ப வீக்கா இருக்காரே.. பெரிய ஆபத்து! ரஷ்ய போரில் மூக்கை நுழைத்த டிரம்ப்.. என்ன இப்படி சொல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போர் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே சமயம் ரஷ்யா மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா இதில் படை உதவிகளை செய்யாத நிலையில் உக்ரைன் சர்வதேச அளவில் தனித்து விடப்பட்டு உள்ளது. உக்ரைனுக்குள் வேகமாக ரஷ்யா முன்னேறி வருகிறது. இந்த நிலையில்தான் இதை பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பேட்டி

டிரம்ப் பேட்டி

பிடனை விமர்சனம் செய்துள்ள டிரம்ப், உக்ரைன் நாட்டின் ஒரே ஒரு துண்டை வைத்துக்கொண்டு புடின் சந்தோசம் அடைய மாட்டார் என்பது எனக்கு தெரியும். அவருக்கு முழு உக்ரைன் தேவை என்பது எனக்கு தெரியும். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கும் வீக்கான, திறமை இல்லாத, அறிவு இல்லாத அரசு காரணமாக புடின் மிக எளிதாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை எடுத்து இருக்கிறார்.

பிடன் மோசம்

பிடன் மோசம்

ஒரு அமெரிக்கராக எனக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. நான் ஆட்சியில் இருந்த போது இப்படி நடக்கவில்லை. எனக்கு நடக்கும் விஷயங்களை பார்த்தால் கோபமாக வருகிறது. இது அனைத்திற்கும் காரணம் தேர்தல் தோல்விதான்.

புடின் சூப்பர்

புடின் சூப்பர்

ஆனால் அந்த தேர்தல் கூட நேர்மையாக நடக்கவில்லை. தேர்தலில் முறைகேடு செய்ததால் நான் தோல்வி அடைந்தேன். புடின் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டு இருக்கிறார். அவர் ஒரு ஜீனியஸ். அவருக்கு எதிராக பெரிதாக பொருளாதார தடை வராது என்று அவருக்கு தெரியும். வெறும் 2-3 டாலர் மதிப்பிற்கு எதாவது பொருளாதார தடை விதிப்பார்கள் என்று அவருக்கு தெரியும். பெரிதாக பொருளாதார தடை விதிக்க மாட்டார்கள் என்றும் புடினுக்கு தெரியும்.

உக்ரைன் நாடு

உக்ரைன் நாடு

இதை பயன்படுத்திக்கொண்டு அவர் உக்ரைன் என்ற நாட்டையே கைப்பற்ற உள்ளார். இது ஒரு ஸ்மார்ட் மூவ். உக்ரைன் விஷயத்தில் பிடன் செய்த எதுவும் பயன் அளிக்கவில்லை. அவர் சொதப்பிவிட்டார். அமெரிக்காவின் வீக்னசை பார்த்து புடின் இப்படி செய்கிறார். ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்காவின் வீக்னஸை பிடன் படம் போட்டு காட்டிவிட்டார். அங்கு தொடங்கிய பிரச்சனை உக்ரைனில் முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நடந்ததை ரஷ்யா பார்த்துவிட்டது.

ரஷ்யா வேகம்

ரஷ்யா வேகம்

இப்போது உக்ரைனில் நடப்பதை பார்த்து வருவதாக பிடன் கூறியுள்ளார். அதெல்லாம் பொய். பிடன் பெரும்பாலும் இப்போது தூங்கிக்கொண்டு இருப்பார். ரஷ்யாவையும் சீனாவையும் பிடன் இணைத்துவிட்டார். அதுதான் இருப்பதிலேயே மோசமான விஷயம். நான் அவர்களை இணைய விடாமல் தடுத்தேன். அவர்கள் இப்போது இணைந்துவிட்டனர். அது நல்லதுக்கு இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

தவறு

தவறு

ஆனால் இப்போது பிடனுக்கு எதிராக பேசும் டிரம்ப் முன்னதாக இதே உக்ரைன் விஷயத்தில் பெரிய தவறு செய்தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் பெயரை டேமேஜ் செய்ய வேண்டும் என்றும், பிடனின் ஒரு ஒப்பந்தம் பற்றி தவறாக பேச வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அரசிடம் டிரம்ப் கோரிக்கை வைத்தார். இந்த சம்பவம் வெளியே தெரிந்த நிலையில் இதற்கு எதிராக டிரம்ப் impeachment செய்யப்பட்டார். அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 பெரிய ஆபத்து

பெரிய ஆபத்து

ஏனென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெளிநாட்டு உதவிகளை பெற கூடாது. வெளிநாட்டு தலையீடு இருக்க கூடாது. ஆனால் டிரம்ப் இதில் உக்ரைன் உதவியை கேட்டார். இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் உக்ரைனும் டிரம்பிற்கு உதவவில்லை. இதையடுத்து ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ஆயுத உதவிகளை கேட்டது. அப்போது உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளிக்க மறுத்து, உக்ரைனை முதுகில் குத்தியவர் டிரம்ப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+