5 இன்ச் இடைவெளிதான்.. ராட்சத சுறாவிடம் இருந்து 'எஸ்கேப்பான' விஞ்ஞானி.. கதிகலங்க வைக்கும் வீடியோ
நியூயார்க்: கடலுக்குள் குதிக்க தயாரான பெண் விஞ்ஞானி ஒருவர் 5 இன்ச் இடைவெளியில் ராட்சத சுறாவிடம் இருந்து தப்பித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே ஒரு நொடி கடந்திருந்தால் கூட நேராக சுறாவின் வாய்க்கு உள்ளேயே அவர் விழுந்திருப்பார். இந்த வீடியோ பார்க்கும் நெட்டிசன்கள் "மயிரிழையில் தப்புவது என்பது இதுதானா" என அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுறா மீன்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான சுறாக்கள்..
கடலில் ஆபத்தான உயிரினங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது சுறாக்கள் தான். பல அடி நீளம் கொண்ட திமிங்கலங்களை விட சுறாக்கள் தான் மிகுந்த ஆபத்தானவையாக அறியப்படுகிறது. இதனால்தான், சுறாக்கள் உலாவும் இடங்களுக்குள் திமிங்கலம், கடல் முதலைகள் கூட செல்ல தயங்கும். அந்த அளவுக்கு மூர்க்க குணம் படைத்தவை சுறாக்கள். அதுமட்டுமின்றி வேட்டையாடும் திறனும், மோப்ப சக்தியும் அதிகம் உள்ளதால் சுறாவின் பிடியில் இருந்து இரைகள் தப்பிப்பது என்பது முடியாத காரியம்.

மனித வேட்டையில் இறங்கிய சுறாக்கள்
இதனிடையே, இந்த சுறாக்களால் மனிதர்கள் அதிக அளவில் கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிச்சயம் சுறாக்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. சுறாக்களின் வாழ்விடமான கடலில் எந்த தற்காப்பு அம்சங்களும் இல்லாமல் சென்று அவற்றிடம் சிக்குவது மனிதர்களின் பிழைதான். அதுமட்டுமல்லாமல், சுறாக்கள் இருக்கும் பகுதி என எச்சரிக்கப்பட்ட பின்னரும், அந்த இடத்தில் படகிலோ, நீச்சல் அடித்தோ செல்வதுதான் சுறாக்களுக்கு மனிதர்கள் இரையாவதற்கு முக்கிய காரணம். கடந்த சில மாதங்களில் மட்டும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் ஏராளமான மனிதர்கள் சுறாக்களின் பசிக்கு உணவாகியுள்ளனர்.

கடலுக்குள் இறங்க தயாரான விஞ்ஞானி
இந்நிலையில், அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள 'ஆகூ' தீவில் நேற்று நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆகூ தீவில் கடந்த சில வாரங்களாக கடல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்குள் இருக்கும் செடிகள், பாசிகள், சிறிய உயிரினங்கள் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் நோய்களுக்கு மருந்து தயாரிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களின் ஒரு பெண் விஞ்ஞானியான ரேம்ஸி (32) என்பவர் நேற்று கடலுக்குள் சென்று ஆராய்ச்சி செய்ய தயாரானார்.

பாய்ந்து வந்த சுறா..
கடலுக்கு செல்வதற்கான உடை, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை அணிந்து கடலுக்குள் குதிப்பதற்காக, கப்பலில் இருந்து ரேம்ஸி படிக்கட்டில் கீழே இறங்கினார். பின்னர், கடலில் குதிக்க தயாரான போது, கடலுக்கு அடியில் மறைந்து இதை பார்த்துக்கொண்டிருந்த ராட்சத 'டைகர்' சுறா ஒன்று திடீரென அவரை நோக்கி பாய்ந்து வந்தது. கடலுக்குள் குதிக்க ஒரு நொடிக்கு முன்பு இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட ரேம்ஸி உடனே படிகட்டின் வழியே மேலே ஏறினார். ஆனால் அவரது கால் நுனி வரை சுறாவின் வாய் வந்துவிட்டது. பின்னர் அவர் மேலே ஏறியதும் ஏமாற்றத்துடன் அந்த சுறா கடலுக்குள் சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை பயத்தில் புல்லரிக்க செய்து வருகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications